‘சேட்டன்’ சாம்சன் தொட்டா ‘பவரு’: தெறிக்கவிட்ட இந்தியா ஜோரு

கிறைஸ்ட்சர்ச்: முதல் ‘டி–20’ போட்டி யில் சஞ்சு சாம்சன் ‘சரவெடி’ அரைசதம் விளாச, இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது.

நியூசிலாந்து சென்று உள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

பிலிப்ஸ் விளாசல்

நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பர்ட், ஆலன் நல்ல அடித்தளம் அமைத்தனர். நான்கு ஆண்டு களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீசிய புவனேஷ்வர் குமாரின் 2வது ஓவரில் செய்பர்ட் (4, 4, 6) விளாச, 17 ரன் எடுக்கப்பட்டன. செய்பர்ட், 24 ரன்னில் அவுட்டானார். அக்சர் படேல் ‘சுழலில்’ ஆலன் (45) சிக்கினார். டேரில் மிட்சல் (28) நிலைக்கவில்லை. பின் இந்திய பவுலர்களை கிளன் பிலிப்ஸ் பதம் பார்த்தார். 27 பந்தில் அரைசதம் எட்டினார். பெவன் ஜேக்கப்ஸ் (31) ரன் அவுட்டானார். நியூசி லாந்து அணி 20 ஓவரில் 225/4 ரன் குவித்தது. பிலிப்ஸ் (82 ரன், 40 பந்து, 8×4, 3×6), பிரேஸ்வெல் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.

அதிரடி துவக்கம்

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ‘சேட்டன்’ சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா கலக்கல் துவக்கம் தந்தனர். பெர் குசன் ஓவரில் சாம்சன் (4, 6, 4, 5 வைடு) அடித்து நொறுக்க, மொத்தம் 22 ரன் கிடைத்தன. ஆடம் மில்னே வீசிய அடுத்த ஓவரில் அபிஷேக் (4, 5 வைடு, 4, 6, 6) விளாச, மொத்தம் 26 ரன் எடுக்கப் பட்டன. சாம்சன், 23 பந்தில் அரைசதம் எட்டினார்.

முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவரில் 93 ரன் குவித்த நிலையில், பிரேஸ்வெல் ‘சுழலில்’ அபிஷேக் (29) வீழ்ந்தார். கேப்டன் சான்ட்னர் பந்தில் சாம்சன் (67 ரன், 33 பந்து, 8×4, 4×6) போல்டானார். முன்னதாக களமிறக்கப்பட்ட திலக் வர்மா (6) சோபிக்க தவறி னார். சான்ட்னர் வலையில் இஷான் கிஷான் (1) சிக்க, 10.3 ஓவரில் இந்தியா 122/4 ரன் எடுத்து தவித்தது.

சபாஷ் நமன் திர்

கடைசி கட்டத்தில் அக்சர் படேல் (24) ஓரளவு கைகொடுத்தார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், நமன் திர் சேர்ந்து அசத்தினர். சான்ட்னர் ஓவரில் ஷ்ரேயஸ் (6, 4, 4) விளாச, போட்டி இந்தியா வசம் வந்தது. ஷ்ரேயஸ், 42 ரன்னுக்கு (28 பந்து, 1×4, 2×6) வெளி யேறினார். கடைசி ஓவரில் இந்திய வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டன. ஹென்றி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட நமன் திர், வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 19.4 ஓவரில் 230/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நமன் திர் (42 ரன், 15 பந்து, 5×4, 2×6), நிதிஷ் குமார் ரெட்டி (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாவது ‘டி–20’ போட்டி நாளை (அக். 24) கிறைஸ்ட்சர்ச்சில் நடக்க உள்ளது.

சுருக்கமான ஸ்கோர்

நியூசிலாந்து 225/4 (20 ஓவர்)

பேட்டிங்

பிலிப்ஸ் 82(40)

ஆலன் 45(24)

ஜேக்கப்ஸ் 31(16)

பவுலிங்

அர்ஷ்தீப் 1/45(4 ஓவர்)

அக்சர் 1/51(4 ஓவர்)

இந்தியா 230/6 (19.4 ஓவர்)

சாம்சன் 67(33)

ஷ்ரேயஸ் 42(28)

நமன் திர் 42*(15)

பவுலிங்

சான்ட்னர் 2/39 (4 ஓவர்)

பிரேஸ்வெல் 2/37 (4 ஓவர்)

ரிசல்ட்: இந்தியா வெற்றி (4 விக்.,)

முதல் பந்தில் ‘சிக்சர்’ மாட் ஹென்றி ஓவரில் நேற்று, தான் சந்தித்த முதல் பந்தையே அபிஷேக் சர்மா சிக்சருக்கு அனுப்பினார். சர்வதேச ‘டி–20’ அரங்கில் முதல் பந்தில் அதிக முறை (7) சிக்சர் அடித்தவர் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார். அடுத்த இடத்தில் ஷபிக்குல்லா ஷின்வாரி (6 முறை, ஆப்கன்) உள்ளார்.
* மாட் ஹென்றி பந்தை (4.2) நேற்று சிக்சருக்கு அனுப்பினார் சாம்சன். இது சர்வதேச ‘டி–20’ அரங்கில், இந்த ஆண்டில் (2026) இந்தியா சார்பில் அடிக்கப்பட்ட 350வது சிக்சராக அமைந்தது. இந்த இலக்கை எட்டிய முதல் அணி என்ற பெருமை பெற்றது.
* ‘பவர் பிளே’ ஓவரில் (1–6) இந்தியா நேற்று 94/1 ரன் எடுத்தது. டி–20 அரங்கில் அதிக ரன் எடுத்த பட்டியலில் 3வது இடத்தை (94/2, கவுஹாத்தி, 2026) பகிர்ந்து கொண்டது. முதல் இரு இடங்களில் 100/0 (எதிர், ஆப்கன், 2026, டில்லி), 95/1 ரன் (எதிர், இங்கி., மும்பை, 2025) உள்ளன.

அதிக ரன்

சர்வதேச ‘டி–20’ அரங்கில் வெற்றிகரமாக ‘சேஸ்’ செய்தததில் இந்தியா சார்பில் 7 அல்லது அதற்கு கீழ் களமிறங்கி அதிக ரன் எடுத்த வீரரானார் நமன் திர் (42 ரன், 7வது இடம்). இதற்கு முன் இர்பான் பதான் (33* ரன், எதிர், இலங்கை, 2009, கொழும்பு) அதிக ரன் எடுத்திருந்தார்.
* சர்வதேச ‘டி–20’ அரங்கில், ஒரு ஆண்டில் அதிக முறை 50+ ரன் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை (தலா 8 முறை) இஷான் கிஷான் உடன் சாம்சன் பகிர்ந்து கொண்டார். முதல் இடத்தில் சூர்யகுமார் (11, 2022), 2வது இடத்தை கோலி (9, 2022)+அபிஷேக் சர்மா (9, 2026) பகிர்ந்து கொண்டுள்ளனர்.

‘கால்பந்து வீரராக’ அர்ஷ்தீப்

நேற்று தனது 100வது சர்வதேச ‘டி–20’ போட்டியில் பங்கேற்ற அர்ஷ்தீப் சிங், சில நிமிடங்கள் கால்பந்து வீரராக மாறினார். இவரது பந்தை (17.3) அடித்த பிலிப்ஸ் ஓடத் தயங்கினார். மறுமுனையில் இருந்த பெவன் ஜேக்கப்ஸ் ஒரு ரன்னுக்கு ‘ரிஸ்க்’ எடுத்து ஓடி வந்தார். இதை பார்த்த அர்ஷ்தீப், பந்தை கையில் எடுத்து ‘த்ரோ’ செய்வதற்கு நேரம் இல்லை என்பதை உணர்ந்தார். உடனே சாதுர்யமாக இடது காலால் பந்தை உதைத்து ‘பெயில்சை’ தகர்த்தார். பெவன் ஜேக்கப்ஸ் (31) நுாலிழையில் ரன் அவுட்டானார். இது போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தியது.

நம்பிக்கை

‘‘நல்ல துவக்கம் கிடைத்துவிட்டால், ‘பவர் பிளே’ ஓவரிலேயே (முதல் 6 ஓவர்) அதிரடியாக ரன் சேர்த்து வெற்றியை உறுதி செய்துவிட வேண்டும். இதை தான் கடந்த இரு ஆண்டுகளாக பின்பற்றுகிறோம். நாட்டுக்காக விளையாடுகிறோம் என்பதை மனதில் வைத்து நம்பிக்கையுடன் பேட் செய்ய வேண்டும்.
– சாம்சன்
இந்திய அணி வீரர்

‘சேஸ்’ சாதனை

சர்வதேச ‘டி–20’ அரங்கில் நேற்று இந்தியா அதிக பட்ச ஸ்கோரை (230/6) ‘சேஸ் செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 209 ரன் (எதிர், ஆஸி., 2023, விசாகப்பட்டினம்) விரட்டியதே அதிகம்.
* இது, நியூசிலாந்துக்கு எதிராக ‘டி–20’ போட்டியில் 2வது சிறந்த ‘சேஸ்’. முதலிடத்தில் ஆஸ்தி ரேலியா எடுத்த 244 ரன் (2018, ஆக்லாந்து) உள்ளது.

Source link