மரக்காணத்தில் கனமழை உப்பு உற்பத்தி பாதிப்பு

மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் பெய்த கனமழையால், 2,000 ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் வேதாரண்யம், துாத்துக்குடிக்கு அடுத்ததாக மரக்காணம் உள்ளது. இங்கு மத்திய, மாநில அரசு மூலம், 2,000 ஏக்கரும், தனியார் மூலம், 4,000 ஏக்கரிலும் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு, ஒரு மூட்டை உப்பு, 300 ரூபாய் வரை விற்பனையானது. இந்தாண்டு விலை கடும் விலை வீழ்ச்சியடைந்து, ஒரு மூட்டை, 220 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், உப்பு உற்பத்தியாளர் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘வேதாரண்யம், துாத்துக்குடியில் மழைநீர் மற்றும் கடல்நீர் உப்பு உற்பத்தி செய்யும் இடங்களில் சூழ்வதில்லை இதனால், உப்பு உற்பத்தி பாதிப்படைவதில்லை.

ஆனால் மரக்காணத்தில் மழைநீர், கடல்நீர் உப்பு உற்பத்தி செய்யும் பாத்திகளில் கலப்பதால் உப்பு உற்பத்தி பாதிப்படைகிறது. இதனால், மரக்காணத்தில் உற்பத்தியாகும் உப்பு வேதாரண்யம், துாத்துக்குடியின் தரத்தை விட குறைவாக உள்ளதால், மரக்காணத்தில் உற்பத்தியாகும் உப்பின் விலை குறைவாக உள்ளது’ என்றனர்.

Source link