புதுடில்லி: விமான எரிபொருள மீதான வாட் வரியை குறைக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு வரவேற்றுள்ளார்.
அவரது பதிவு: விமான எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்கிறேன்; இது விமானப் போக்குவரத்துத் துறைக்கு ஒரு நல்ல முன்னேற்றமாகும் . இந்த நடவடிக்கையை மேற்கொண்ட
முதல்வர் விஜய்க்கு நன்றி.
விமானப் பயணத்தை மேலும் மலிவானதாக மாற்ற, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். பயணிகளின் நலனே எப்போதும் நமது முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.
