ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று (23-10-26) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார். அங்கு பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “2029இல் எல்லோரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெற்றே ஆக வேண்டும். இந்தியாவினுடைய வெற்றி தமிழகத்தில் இருந்து உருவாக்கப்படும், இது தான் வரலாறாக போகிறது. இந்தியாவினுடைய வெற்றி மதச்சார்பற்ற கொள்கையின் வெற்றி தமிழகத்தில் இருந்து உருவாக்கப்படும். இதை உடைப்பதற்கு தான் புதிய நடிகர்கள் டெல்லியில் உட்கார்ந்திருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் நடக்காது.
எதை வேண்டுமானாலும் பார்ப்போம்..யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் வரட்டும். யார் வேண்டுமானாலும் புதிதாக வரட்டும். திமுக கொஞ்சம் போர் அடித்துவிட்டது, சைத்தானுடைய பிள்ளைகள் ஆகிவிட்டார்கள். இப்போது புதுசு புதுசாக சைத்தானுடைய பிள்ளைகள் டெல்லியில் இருந்து பேக் பண்ணி டெல்லி உட்கார்ந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். எஸ்.ஐ.ஆர் கூட்டத்தை நாங்கள் புறக்கணித்தோம், நம்முடன் கம்யூனிஸ்ட் தோழர்கள் புறக்கணித்தார்கள். மதச்சார்பற்ற கொள்கை என்று வரும் போது கம்யூனிஸ்ட் தோழர்கள் நம்முடைய கூட்டணியில் தான் நிற்பார்கள். எனவே எதிர்க்க வேண்டியவர்கள் கம்யூனிஸ்ட்களை அல்ல, மதச்சார்பின்மைக்கு யாரெல்லாம் எதிராக இருக்கிறார்களோ அவர்களைத் தான்.
அரசியலில் தவறுகள் நடக்கும், அதை சொல்லும் போது சரி செய்யும் இடத்தில் முதலமைச்சர் இருக்கிறார், நாங்களும் இருக்கிறோம். எங்களுடைய முதலமைச்சர் சாமானியர் வீட்டு பிள்ளையாக தான் இன்றைக்கும் இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் கொள்கை ரீதியிலான பயணத்தில் எப்போதும் உண்மையாகவும் நேர்மையாக இருக்கும். வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் போது தனது பெயரை சி.ஜோசப் விஜய் என்று சொன்னார். சிறுபான்மை சமூகத்தில் பிறந்தாலும் நான் முதலமைச்சர் வேட்பாளராக நின்றால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த மக்களும் ஓட்டு போடுவர்கள் என்று நம்பி அதை சொன்னார்.
இந்த 75 வருடத்தில் ஒரு சிறுபான்மை சமூகத்தில் இருந்து யாராவது ஒருத்தர் முதலமைச்சர் ஆகியிருக்க முடியுமா? ஐயூஎம்எல் கட்சியில் இருந்து வந்த ஷாஜகானுடைய அமைச்சர் என்பது அவருடைய தனிப்பட்ட அமைச்சர் என்கிற அதிகாரம் கிடையாது. இது ஒட்டுமொத்த இஸ்லாமிய சகோதரர்களுக்கான சகோதரிகளுக்கான அமைச்சரவை. இஸ்லாமிய சகோதர சகோதரிகளே, நாங்கள் எப்போது பா.ஜ.கவுடன் எந்த காலத்திலும் உறவும் கிடையாது, கூட்டணியும் கிடையாது என்பதை உறுதியாக சொல்கிறோம்” என்று கூறினார்.
