TN Election 2026 | தி.மு.க.-வை ஆட்சியில் அமர்த்துவதற்காக விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று காரைக்குடிக்கு வந்தது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று காரைக்குடிக்கு வந்த சம்பவத்தை சொன்னார்கள். சைக்கிளை ஒட்டிக்கிட்டு வந்தாரு. அதன்பின் ஓடிகிட்டு கைகளை ஆட்டிக்கிட்டு வந்தாரு என்று சொன்னார்கள்.

எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. எல்லோரும் புரட்சி தலைவர் அம்மா ஆகிவிட முடியாது. அதற்கான கொள்கைகள் வேண்டும். அமைப்புகள் வேண்டும். இயற்கையான உணர்வுகள் வேண்டும்.

ஏதோ திமுக-வை ஆட்சியில் அமர்த்துவதற்காக ஜோசப் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். என்னை பொறுத்தவரையில் அவர் நல்ல குடும்பஸ்தனாக இருக்க வேண்டும். நல்ல கணவனாக இருக்க வேண்டும்.

காரைக்குடி சம்பவத்தை சொன்னார்கள். வேடிக்கையாக இருந்தது. திமுக-வை ஓட்டனும் அதற்காக வரனும். சைக்கிள் ஓட்டுவதற்காக வரக் கூடாது. இதெல்லாம் கேலிக்கூத்தான விசயமாக இருக்குது.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Source link