பிரபல நடன இயக்குநர் பிரமேஷ் தேவ் பெற்ற சர்வதேச விருதுகள்!

நடன இயக்குநர் ரவி தேவின் மகன் பிரமேஷ் தேவ். புதிய சாதனைகளை நிகழ்த்தி சர்வதேச  விருதுகளை பெற்றிருக்கிறார்.

விஜய், அஜித், மகேஷ்பாபு,  ராம் சரண்,  நிவின்பாலி, பகத் பாசில் போன்ற தென்னிந்திய முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் நடன உதவியாளராக பணியாற்றிய பின் தென்னிந்திய மொழிகளில் 25 படங்களுக்கு மேல் தனித்து நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கின்றார்

ஃபோகஸ் சர்வதேச திரைப்பட விழா அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் நடைபெற்றது. இவ்விழாவில் 18 நாடுகள் கலந்து கொண்டன. இதில் ஓ மை பேபி என்ற இசை ஆல்பத்திற்கு நடனம் அமைத்ததன் மூலம் சிறந்த நடன இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டு பிளாட்டினம் விருதுதை பெற்றிருக்கிறார் நடன இயக்குநர் பிரமேஷ் தேவ்

பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவிற்கும் இந்த ஓ மை பேபி இசை ஆல்பத்திற்கு நடனம் அமைத்ததன் பேரில் சிறந்த நடன இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டு “கேன்ஸ் வின்னர் இன் கோரியகிராபர் ” விருதினை பிரமேஷ் தேவ் பெற்றுள்ளார்