பெங்களூர் அருகே தொடர்ந்து 2வது நாளாக நிலநடுக்கம்.. குலுங்கிய சோமசெட்டிஹள்ளியால் மக்கள் பீதி

பெங்களூர்: பெங்களூர் அருகே உள்ள சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகாக சோமசெட்டிஹள்ளி கிராமத்தில் இன்று அதிகாலையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 2.9 என்று இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

முன்னதாக நேற்றைய தினம் பெங்களூர் புறநகர் மாவட்டம் திம்மோஜனஹள்ளி கிராமத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.0 என பதிவானது. திம்மோஜனஹள்ளி கிராமத்தில் அருகே உள்ள அருகே நரகனஹள்ளி, கர்னலா, துபெகெகெரே உள்ளிட்ட கிராமங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இருப்பினும் பெங்களூர் அருகே அடுத்தடுத்த நாட்களில் நிலநடுக்கம் ஏற்படுவது அங்குள்ள மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.