தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தொழில் அதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் மற்றும் போக்சோ வழக்கு தினந்தோறும் பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், இன்று அவருக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தொழில் அதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் மற்றும் போக்சோ வழக்கு தினந்தோறும் பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்தச் சூழலில் நேற்று ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா சிங்கப்பூர் செல்ல இருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்நிலையில் அவருக்கு இன்று சம்மன் அனுப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் போலீசார் அதிரடி
ஜெம் வீரமணிக்கு எதிராக இதுவரை ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு பகல் 2.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் செல்ல இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏற அனுமதிக்க்ப்பட்ட நிலையில் ஜெம் வீர்மணியை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஜெம் வீரமணி மகள் அர்ச்சனா இருக்கிறார். அவரை ஆப் லோட் செய்து இறக்கி விடும் படி போலீசார் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து போலீசார் கோரிக்கையை ஏற்ற விமான நிலைய அதிகாரிகள், அர்ச்சனாவை விமானத்தில் இறக்கனினர். அவரது உடமைகளும் இறக்கப்பட்டனர். பின்னர் சிறப்பு புலனாய்வு போலீசார் அர்ச்சனாவை விசார்ணைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
வழக்கறிஞர் விளக்கம்
நேற்று மதியத்தில் இருந்து இரவு வரை விசாரணை நடைபெற்றதாக கூறப்பட்டது. அப்போது செய்தியாலர்களை சந்தித்த அர்ச்சனா தரப்பு வழக்கறிஞர்கள், அர்ச்சனாவின் மகனுக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், சிறப்பு புலனாய்வு போலீசாருக்கு கடிதம் எழுதி அனுப்பிய பிறகே, சிங்கப்பூர் புறப்பட்டதாகவும், ஆனால் போலீசார் எந்த காரணமும் சொல்லாமல் அவரை அழைத்து சென்றதாகவும் கூறியுள்ளார். ‘’
விசாரணையின் போது உடல்நல குறைவு
நேற்று சிறப்பு புலனாய்வு போலீசார் ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவருக்கு உடல் நிலை குறைவு ஏற்ட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும் படி, சிறப்பு புலனாய்வு போலீசார் அர்ச்சனாவுக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.
காவல்துறை முன்னெடுத்த நடவடிக்கைகள்
ஜெம் வீரமணி மீது புகார் அளிக்க சிறப்பு எண் வெளியீடு ஜெம் வீரமணி, உதவியாளர் சாந்தி மற்றும் அவரது கணவர் மீது குண்டாஸ் பதியப்பட்டது அடுத்தடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய ஜெம் வீரமணியிடம் பணிபுரிந்த ஊழியர்கள் கைது
Source link
