சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பிரசாரத்தின் போது இரட்டை இலைக்கு ஓட்டு போடுமாறு செங்கோட்டையன்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பிரசாரத்தின் போது இரட்டை இலைக்கு ஓட்டு போடுமாறு செங்கோட்டையன் வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

அதிமுகவில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்தவர் செங்கோட்டையன். தமிழகம் முழுவதும் தவெக வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டி பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தவெக வேட்பாளரை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

வாகனம் ஒன்றில் இருந்தபடியே அங்கு கூடியிருந்த மக்களிடம் செங்கோட்டையன் ஓட்டு சேகரித்தார். அப்போது, விசில் சின்னத்துக்கு பதில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டார்.

அடுத்த கணமே சுதாரித்துக் கொண்ட செங்கோட்டையன், இரட்டை இலை என்றே கேட்டு, கேட்டு பழகிவிட்டேன், என்று கூறி சமாளித்தார். பின்னர், தவெகவின் விசில் சின்னத்தை கூறி, அதற்கு ஓட்டு போடுமாறு வாக்காளர்களிடம் கூறினார்.

Source link