கரூர்: “சட்டை அவரோடது தான். ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!” – திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை| Karur Annamalai Mocks DMK Candidate Shirt Is His Groom Is Not

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.

இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பிரச்சார வாகனத்தில் நின்றபடி பேசிய அண்ணாமலை, ” கரூரில் தனி சரித்திரம் படைத்து வருகிறோம். கடந்த 5 ஆண்டுகள் அண்ணன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல.

கரூரில் அண்ணாமலை பிரச்சாரம்

கரூரில் அண்ணாமலை பிரச்சாரம்

அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்று உங்களுக்கு தெரியும். ஆனால், எதிரணி வேட்பாளர் பெயர் தியாகராஜன் என்று கூறுகின்றனர். உண்மையான வேட்பாளர் அவரில்லை. சட்டை அவரோடது தான். ஆனால் மாப்பிள்ளை அவரில்லை. என்பது போல உள்ளது.

அவர்களுக்கு புழல் சிறையில் தனி அறை தயாராக உள்ளது. ஆட்சி மாற்றம் வந்த பிறகு அரசியலுக்கு எதற்கு வந்தோம் என்று செந்தில் பாலாஜி வருத்தப்படுவார். இந்த முறை வெறும் 441 நாள் மட்டும் கிடையாது.

Source link