#BREAKING : லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக மீண்டும் டேவிட்சன் ஆசிர்வாதம் நியமனம்!

தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சியில் அமரப்போகும் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சட்டமன்றத் தேர்தல்
ஏப்ரல் 23  ல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்கள் தொகுதிகளில் நேரடியாக சென்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் அதேபோல் கட்சித் தலைவர்களும் அவரவர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் .

செய்திகள் தோறும் பிரச்சாரம் குறித்தான தகவல்கள் களைகட்டி வரும் நிலையில் அவ்வப்போது தேர்தல் ஆணையம்  முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளும் மக்கள் கவனத்தில் பதிகின்றன. அந்த வகையில் கடந்த 8 ந்தேதி லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஆயுதப்படை டிஜிபி-யாக இருந்த டேவிட்சன் ஆசிர்வாதம் மாற்றப்பட்டு, அந்த இடத்திற்கு சந்தீப் மிட்டல்  IPS புதிய டிஜிபி-யாக நியமிக்கப்பட்டது பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இந்த உத்தரவை தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ், அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதேபோல் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பணியில் இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர், நிர்வாக இயக்குநராக பணியாற்றிய  சாய்குமாரை நியமனம் செய்தது தேர்தல் ஆணையம். ஏற்கனவே சட்டம் – ஒழுங்கு டிஜிபி வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியாக நியமிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றங்கள் பலரிடத்தும் கலவையான கருத்துகளை பெற்றது.

Source link