சற்று பின்னடைவு தான்; ஆனாலும் முதல் பாக வசூலை காலி செய்த ஜெயிலர் 2; முழு வசூல் நிலவரம்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் மாஸ் காட்டி வரும் நிலையில், படத்தின் 9-வது நாள் கலெக்ஷன் குறித்த அப்டேட்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து உலகம் முழுவதும் சுமார் ரூ600 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது, அதனைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த அக்டோபர் 14-ந் தேதி வெளியானது. முதல் நாளில் இருந்தே படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், படடத்தின் 9-வது நாள் கலெக்ஷன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

படம் வெளியான 8 நாட்களுக்குள் உலகளவில் ரூ600 கோடி வசூலைக் கடந்த நிலையில், தற்போது பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேகம் சற்றே குறைந்துள்ளது. வியாழக்கிழமை ரூ17.15 கோடி வசூலித்த நிலையில், வெள்ளிக்கிழமை சற்ற குறைந்து ரூ14.50 கோடி வசூலித்தது என்று திரையுலக வசூல் கணிப்புத் தளமான சாக்னில்க் (Sacnilk) தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் மொத்த வசூல் (India Gross) ரூ408.55 கோடியையும், நிகர வசூல் (Net Collection) ரூ348.85 கோடியையும் எட்டியுள்ளது. அதே நேரத்தில், உலகளாவிய மொத்த வசூல் ரூ628.05 கோடியாக உள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று, ஜெயிலர் 2 தமிழ் பதிப்பிற்கு ஒட்டுமொத்தமாக 34.77% திரையரங்க ஆக்கிரமிப்பு (Occupancy) பதிவானது. இதில் காலைக் காட்சிகள் 21.15%, மதியக் காட்சிகள் 28.85%, மாலைக் காட்சிகள் 38.31% மற்றும் இரவுக் காட்சிகள் 50.77% பதிவாகின. தெலுங்கு பதிப்பு ஒட்டுமொத்தமாக 27.35% ஆக்கிரமிப்பையும், ஹிந்தி பதிப்பு 17.07% ஆக்கிரமிப்பையும் பதிவு செய்தன.

ஜெயிலர் 2 ஏற்கனவே அதன் முதல் பாகத்தின் வசூலை விஞ்சியுள்ளது. ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் ரூ604.74 கோடி வசூலித்திருந்தது. இந்தியாவில் ரூ348.55 கோடி நிகர வசூலையும், வெளிநாடுகளில் ரூ196 கோடியையும் ஈட்டியது. ஆனால், ஜெயிலர் 2 திரைப்படத்தின் உலகளாவிய வசூல் ஏற்கனவே ரூ628.05 கோடியை எட்டியுள்ளது; இதில் வெளிநாட்டு வசூல் மட்டும் ரூ219.50 கோடியாகும்.

ஜெயிலர் 2 என்பது ரஜினிகாந்தின் 2023-ஆம் ஆண்டு மெகா ஹிட் திரைப்படமான ஜெயிலரின் தொடர்ச்சியாகும். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த இரண்டாம் பாகத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். ரஜினிகாந்துடன் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்ணா, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Source link