சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் 225வது நினைவுத் தினம் இன்று (24-10-26) அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கல் மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு அமைச்சர் ராஜ்மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், கோவை பள்ளி மாணவன் அகிலன் சாதிய கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “பள்ளிக்கூடங்களில் என்ன சம்பவம் நடந்தாலும் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். இதை போன்ற சம்பவங்களை கேள்விப்படுகிற பொழுது நான் வேதனை அடைகிறேன். பல நாள் இதை எப்படி தடுப்பது என்று பல நாள் யோசித்திருக்கிறேன். இந்த விவகாரத்தில் எந்த அரசியல் தலையீஇடும் இல்லாத புலன் விசாரணையை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். தவறு செய்தது யாராக இருந்தாலும் எப்பேர்பட்ட பின்புலத்தில் இருந்தாலும் நேர்மையாக விசாரணை செய்யப்படும்.
வாழ்நாள் முழுவதும் பல்வேறு அவமானங்களை நான் சுமந்திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் நான் எதிர்வினையாற்றினால் அது சரியாக இருக்காது. ஆனால் இந்த விவகாரத்தில் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அதனால் மாணவர்களுக்கு எமோஷனல் வில்லிங் பவரை எப்படி கொண்டு வருவது என்பதை ஆலோசனை செய்து வருகிறோம்” என்று கூறினார். இதையடுத்து தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டிருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எந்த பாலியல் குற்றசாட்டையும் நாம் ந்து குறைத்து மதிப்பிட மாட்டோம். ஆன்லைனில் தங்களை தாங்களே இணைத்து கொண்டவர்களை எல்லாம் தவெக நிர்வாகி என்று சொல்ல முடியாது. பாலியல் குற்றங்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் எந்த கருணையும் காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுப்பது தான் நம்முடைய கொள்கை” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு நிகழ்ச்சிக்கு அழைக்காமல் புறக்கணிப்பதாக சென்னை மேயர் பிரியா கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “மேயரை நாங்கள் எங்கே புறக்கணிக்கிறோம்? அழைப்பு விடுத்தால் தான் அவர் ரிப்பன் மாளிகைக்கு வர வேண்டும் என்பது கிடையாது. அது அவரது இடம், அவர் தாராளமாக வரலாம். ஏற்கெனவே சிஸ்டரிடம் சொல்லிருக்கிறேன். இந்த வெள்ளம் போன்ற இயற்கைக்கு திமுக, அதிமுக, தவெக என்று வித்தியாசம் தெரியாது. மீட்பு நடவடிக்கை போது ஒருங்கிணைப்பு வேண்டும். அதனால் அழைத்தால் தான் வருவேன் என்று பழையதெல்லாம் பார்க்காமல் வர வேண்டும். அவரது ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால் ப்ரோட்டோகால் பார்க்காமல் சிஸ்டரும் வரலாம். யாரும் அவரை புறக்கணிக்கவில்லை” என்று கூறினார்.
