மாணவர்கள் முன் சாதி பெருமை பேசிய அமைச்சர் கீர்த்தனா?: அமைதி காக்கும் விசிக – பெயரளவில் மட்டுமே சமூகநீதி கூட்டணியா? – political criticize rise questions for vck silence for minister keerthana about caste pride in front of students

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, மாணவர்கள் மத்தியில் பேசிய காணொளி ஒன்று இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த சூழலில் அமைச்சர் பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைதி காப்பது ஏன் என அரசியல் விமர்சர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, மாணவர்கள் மத்தியில் பேசிய காணொளி ஒன்று இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதில், “சத்திரியன் என்று சொல்வதற்கும், சத்திரியர் மகளிர் பள்ளியில் படித்தேன் என்று சொல்வதற்கும் பெருமையாக இருக்கிறது” என அவர் நெஞ்சில் கை வைத்துப் பேசியதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இந்தக் காணொளியை முன்வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் சர்ச்சையாகி நிலையில், இதுகுறித்து ஏன் இன்னும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பிலோ அல்லது அமைச்சர் வன்னி அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பெயரளவில் மட்டுமே சமூகநீதி கூட்டணியா?

கடந்த தேர்தலுக்கு பிறகு விடுதலைச் சிறுத்தகள் கட்சி, காங்கிரஸ் ஐயூஎம்எல் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள், தமிழக வெற்றிக் கழகத்தை தலைமையாக ஏற்று கூட்டணி அமைத்தனர். இந்த கூட்டணிக்கு முதலில் சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டதாகவும், பின்னர் அதனை மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என மாற்றி அமைக்க நான் தான் பரிந்துரைத்தேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது குறிப்பிட்டார்.

இந்த சூழலில் அமைச்சர் கீர்த்தனா பள்ளியில் மாணவர்கள் முன்பு நெஞ்சில் கைவைத்து பேசியதற்கு ஏன் இதுவரை எதிர்ப்போ அல்லது கண்டனமோ விசிக தலைவர் திருமாவளவன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், சமூக நீதி என்பது பெயரளவில் மட்டும் தானா? நீங்கள் எந்த கட்சியின் கீழ் கூட்டணியில் இடம்பெற்றி இருக்கிறீர்களோ, அந்த கட்சியின் அமைச்சர் ஒருவர் இப்படியான சாதி பெருமை பேசுவது சமூக நீதிக்கு ஆபத்தானதாக தெரிவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சாதிய வன்கொடுமையால் மாணவர் தற்கொலை

சமீபத்தில் கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்த மாணவர் அகிலன், பள்ளியில் தனக்கு சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதாக கூறி, தனது பெற்றோரிடம் வருத்தப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அம்மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சியினர் வலியுறுத்தல்

இந்த சம்பவம் பூதாகரமாக ஆன நிலையில் எதிர்க்கட்சியினர் பள்ளிகளில் இது போன்று சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் சாதியை காரணம் காட்டி, பாகுபாடுகள் பார்க்கப்படுவது இல்லாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டனர். விசிக தலைவர் திருமாவளவன் பள்ளிகளில் சாதிய பாகுபாடுகளை தவிர்க்க சமூக நீதி மாணவர் படை அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இப்படியான சூழலில் தமிழகத்தில் சாதியால் ஒரு மாணவரின் உயிர் போன நிலையில், மாண்புமிகு அமைச்சர் ஒருவர் தன் பேச்சில் தெரிந்தோ தெரியாமலோ சாதிய பெருமையை வெளிப்படுத்தும் விதமாக பேசியது, கண்டிக்கத்தக்கது எனவும், அதுவும் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் இப்படி பேசியதற்கு எந்த விளக்கம் அளித்தாலும் அது ஏற்புடையதாக இருக்காது எனவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தலித் அமைப்புகள் கண்டனம்

அமைச்சரின் இந்த காணொளி தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில் சில தலித் அமைப்புகள் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் அமைச்சரவையிலும் கூட்டணியிலும் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தகள் கட்சி இதுகுறித்து தற்போது வரை பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link