விஜயவாடா: ஆந்திராவின் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் நடந்த சாலை பணியின் போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போலீசார் தரப்பில் கூறியதாவது; சாலை அமைக்கும் பகுதி 100 கி.மீ., தொலைவில் இருந்ததால், வாகனங்களுக்கு நிரப்புவதற்காக டிரம்களில் டீசல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்போது லாரியில் டீசல் நிரப்பும் போது தீப்பற்றி எரிந்துள்ளது. முறையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், தீ பிற வாகனங்களுக்கும் பரவியுள்ளது.
இரு லாரிகள், ஒரு பைக்கும் முழுவதும் எரிந்து நாசமானது. இதில், லாரியின் உள்ளே இருந்தவரும், அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு தெரிவித்தனர்.
