சண்டிகர்: சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவரை கைது செய்த போலீசார், 6.5 கிலோ ஹெராயின், கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
சர்வதேச போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவரை, படாலா போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6.5 கிலோ ஹெராயின், கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மர்ரும் ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இருவர் மீதும் சிவில் லைன்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கடத்தல் கும்பலை சேர்ந்த மற்றவர்கள் குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
