பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது; ஜோர்டானில் சர்ச் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

நமது நிருபர்

ஜோர்டானில் சர்ச் ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். சர்ச் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜோர்டானின் கராக் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியடைகிறோம். பல அப்பாவி மக்கள் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் மிகுந்த துயரத்தை அளிக்கிறது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். இந்த இக்கட்டான தருணத்தில், ஜோர்டான் அரசிற்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கும்.

பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது; பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் எங்களது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Source link