இந்தக் குழுவினர் இன்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது பாகிஸ்தான் தரப்பில் துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தர், உள்துறை அமைச்சர் மொஹ்சின் ரஸா நக்வி ஆகியோர் உடன் இருந்தனர். இஸ்லாமாபாத்தின் செரீனா ஹோட்டலில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், “இரு தரப்புப் பிரதிநிதிகளும் ஆக்கபூர்வமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான உறுதிப்பாட்டைப் பாராட்டிய பிரதமர், இந்தப் பேச்சுவார்த்தைகள் இப்பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு படிக்கல்லாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தப் பிராந்தியத்தில் நிலையான அமைதியை நோக்கிய முன்னேற்றத்தை அடைவதில், இரு தரப்பினருக்கும் தொடர்ந்து உதவிகளை வழங்க பாகிஸ்தான் ஆவலுடன் காத்திருக்கிறது என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
