40 ஆண்டுகளில் முதல் முறை… ரசிகர்களுடன் தியேட்டரில் 'ஜெயிலர் 2' படம் பார்த்த ரஜினிகாந்த்- வீடியோ

Summary

40 ஆண்டுகளில் முதல் முறையாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் ஐமேக்ஸ் திரையரங்கில் ‘ஜெயிலர் 2’ படத்தை பார்த்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படம் உலகளவில் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கடந்த 15-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியான நாள் முதல் வசூல் குவித்துள்ளது. இதுவரை 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் கேள்வி

‘ஜெயிலர் 2’ படத்தின் வெற்றியை படக்குழுவினரும், ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, சமூக வலைத்தளங்களில் வெளியான ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் சந்தானம் இடம்பெற்றுள்ளதால் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதா? இனிவரும் நாட்களில் அந்த காட்சிகள் வெளியிடப்படுமா? என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

வீடியோ வைரல்

இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரஜினிகாந்த் காரிலிருந்து இறங்கி, படத்தைக் காண ஐமேக்ஸ் திரையரங்கிற்கு செல்கிறார். அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களுடன் ‘ஜெயிலர் 2’ படத்தை ரசிகர்களுடன் கண்டு களித்தார். 40 ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்த் பொது வெளியில் திரைப்படத்தை பார்ப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.



Source link