பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

-நமது சிறப்பு நிருபர்-

பாரா ஆசிய விளையாட்டில் இந்திய நட்சத்திரங்கள் 97 பேர் 114 பதக்கம் வென்றனர். இதில் அதிகபட்சம் 24 பேர், ஹரியானாவை சேர்ந்தவர்கள். அடுத்து உ.பி., (13) உள்ளது. இந்த வரிசையில் தமிழகம் 3வது இடம் பெற்றது. தமிழகத்தை சேர்ந்த 9 வீரர், வீராங்கனைகள் 14 பதக்கம் வென்றுள்ளனர்.

வீரர்களுகளை பாராட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவு: 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், நமது பாரா-விளையாட்டு வீரர்கள் நிகழ்த்தியிருப்பது ஒரு வரலாற்று சாதனையாகும்; 114 பதக்கங்களை வென்று, இந்தப் போட்டிகளில் இந்தியா இதுவரை கண்டிராத மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

ஒட்டுமொத்த தேசத்திற்கும் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கும் தருணமாகும். நமது குழுவில் இடம்பெற்ற ஒவ்வொரு வீரரின் மன உறுதியையும் நான் பாராட்டுகிறேன். ஒவ்வொரு விளையாட்டு வீரரும் இந்த வரலாற்றுச் சாதனையில் பங்களித்ததுடன், தங்கள் வெற்றிகளின் மூலம் எண்ணற்ற இந்தியர்களுக்கு ஊக்கமளித்துள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Source link