IND A vs NZ A – பின்னடைவில் இருக்கும் இந்திய ஏ அணி: வெற்றியைப் பெற இருக்கும் ஒரே வழி இதுதான் – india a team winning chance in 1st test vs new zealand a team

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய ஏ அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து ஏ அணி, அபாரமாக செயல்பட்டு முன்னிலையில் இருக்கிறது.

இப்போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய ஏ அணி, 113/10 ரன்களுக்கு ஆல்அவுட் ஆன நிலையில், அடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 317/10 ரன்களை குவித்து, 204 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

அடுத்து, இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி வரும் இந்திய ஏ அணியில், ஓபனர்கள் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 5 (9), கே.எல்.ராகுல் 4 (15) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில், தற்போது தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகிறார்கள். படிக்கல் 56 (89), சாய் சுதர்ஷன் 39 (104) ஆகியோர் களத்தில் இருக்கும் நிலையில், 2ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியா 106/2 ரன்களை எடுத்து, 98 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்திய அணி வெற்றி வாய்ப்பு: இந்திய அணி, இனி வெற்றியைப் பெற ஒரேயொரு வாய்ப்பு மட்டுமே இருக்கிறது.

என்ன வாய்ப்பு? இந்திய அணி, மூன்றாவது நாள் முழுவதும் தாக்குப்பிடித்து பேட்டிங் ஆட வேண்டும். அப்போதுதான், இந்திய அணியால், 200+ ரன்கள் முன்னிலையை பெற முடியும். அப்படி, 200+ ரன்கள் முன்னிலையை பெற்றால்தான், கடைசி நாளில், நியூசிலாந்து அணிக்கு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்ததை பயன்படுத்தி, கடைசி நாளில் இந்திய அணி பௌலர்கள், 10 விக்கெட்களையும் எடுத்தாக வேண்டும்.

ஒருவேளை, இந்திய அணி, 3ஆவது நாளின் முதல் இரண்டு செஷன்களுக்குள் ஆல்அவுட் ஆகிவிட்டால், நியூசிலாந்து அணியால் எளிதில் வெல்ல முடியும்.

ஸ்கோர் விபரம்: முதலில் களமிறங்கிய இந்திய அணியில், யாஷ் ரதோட் 44 (49), தேவ்தத் படிக்கல் 32 (77) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். மற்றவர்கள் சொதப்பியதால், இந்திய ஏ அணி, 113/10 ரன்களைதான் எடுத்தது.

நியூசிலாந்து பௌலர், சைமன் கீன் 11.3 ஓவர்களில் 24 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஜாக் கிப்சன் 10 ஓவர்களில் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார்.

நியூசிலாந்து அபாரம்: அடுத்து, முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், ஓபனர்கள் சிறப்பாக செயல்பட்டனர். கேப்டன் மரியு 137 பந்தில் 76 ரன்களையும், கர்டஸ் ஹேபி 134 பந்தில் 44 ரன்களையும் எடுத்து, துவக்கத்திலேயே ஸ்கோரை உயர்த்தினார்கள். இந்த இருவரும் சேர்ந்து, 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள்.

பிறகு, மிடில் வரிசை பேட்டர் டீன் பாக்ஸ்கிராப்ட் 51 (79), கிறிஸ்டைன் கிளர்க் 42 (67) ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டதால், நியூசிலாந்து அணி, 317/10 ரன்களை எடுத்து, 204 ரன்கள் முன்னிலையை பெற்றது. இந்திய அணியினர், எக்ஸ்ட்ரா மூலம் மட்டும் 46 ரன்களை விட்டுக்கொடுத்தனர்.

இந்திய அணி, 2ஆவது இன்னில்ஸ்: அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணியில், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 5 (9), கே.எல்.ராகுல் 4 (15) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனப் பிறகு, தற்போது படிக்கல் 56 (89), சாய் சுதர்ஷன் 39 (104) ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

Source link