அல்மாட்டி ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Summary

அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ரஷியாவின் மெத்வதேவ் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் முதல் செட்டை 6-3 என வென்றார்.

2வது சுற்று ஆரம்பிக்கும் நிலையில் அலெக்சாண்டர் பப்ளிக் உடல்நிலை காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதன்மூலம் ரஷியாவின் மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மெத்வதேவ், ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலாஷ்விலி உடன் மோதுகிறார்.

Source link