-நமது சிறப்பு நிருபர்-
சென்னையில் நடந்த முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் குடும்ப திருமண நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளரும், திமுக நிர்வாகியுமான திண்டுக்கல் லியோனி தவெக ஆட்சியை செருப்புடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் பேசியதாவது: ராமனின் செருப்பு எப்படி அயோத்தியை ஆண்டதோ, அது போல நீங்கள் அவிழ்த்து வைத்த செருப்பு தான் இன்று நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறது. காரணம் உங்களுடைய திட்டங்களால் தான், மக்கள் இன்னும் பயன் பெற்று கொண்டே இருக்கிறார்கள்.
மகளிர் உரிமை தொகை துவங்கி, காலை உணவு திட்டம் துவங்கி, அறிவுலக திறப்பு துவங்கி, மெட்ரோ ரயில் பயணம் துவங்கி உங்களை தான் மக்கள் நினைத்துக் கொண்டே இந்த திட்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் இந்த தமிழகத்தை உங்களுடைய செருப்பு தான் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது.
ஆட்சி செய்பவர் பரதன் என்று நினைத்து விடாதீர்கள், 14 ஆண்டுகள் செருப்பு ஆண்டது போல், இது 14 ஆண்டுகள் நீடிக்காது. 14 வாரமோ, 14 மாதமோ… இந்த ஆட்சிக்கு முடிவு கட்டி, மீண்டும் உதய சூரியனை உதிக்க வைக்கிற தலைவர் இந்த திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார்கள். இவ்வாறு திண்டுக்கல் லியோனி பேசினார்.
