கன்னடர்களுக்கு பெங்களூர் ஐடி நிறுவனங்களில் வேலையில்லை.. கொந்தளித்த இளம்பெண்.. பரபரப்பான புகார்

பெங்களூர்: தாய்மொழி கன்னடம் என்று சொன்னால் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணி கிடைப்பது இல்லை. கன்னடர்களை பெங்களூர் ஐடி நிறுவனங்கள் வெளியே அனுப்பி விட்டு மாற்று மொழியினரை மட்டும் வேலைக்கு எடுப்பதாக இளம்பெண் ஒருவர் குற்றம்சாட்டிய வீடியோ தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.

இதுதொடர்பாக அந்த இளம்பெண் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் அந்த பெண் கூறியதாவது:

”வணக்கம். இந்த வீடியோவை ‘ஸ்கிப்’ செய்யாமல் முழுவதுமாக பாருங்கள். உங்களின் ‘ரெஸ்யூம்’மில் தாய்மொழி கன்னடம் என்று கூறியிருந்தால் இண்டர்வியூவில் ரிஜெக்ட் செய்கிறார்கள் என்று நிறைய பேர் வீடியோவில் கூறியிருந்தனர்.

அது 100 சதவீதம் இல்லை 200 சதவீதம் உண்மை என ஆகியுள்ளது. 100 பேர் பணியாற்றும் நிறுவனங்களில் 3, 4 பேர் மட்டுமே கன்னடர்களாக உள்ளனர். கேம்பஸ் இண்டர்வியூக்களை நிறுவனங்கள் பெங்களூர் மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளில் மேற்கொள்வது இல்லை. வேறு வேறு மாநிலங்களுக்கு சென்று இண்டர்வியூ செய்து ஆட்களை கொண்டு வந்து வேலைக்கு அமர்த்துகிறார்கள்.

அவர்களுக்கு திறமை இருக்கிறதா? ஆங்கிலம் தெரிகிறதா? என்பதை பாராமல் குறைந்த சம்பளத்துக்கு வருகிறார்கள் என்ற ஒரேயொரு காரணத்துக்காக வெளிமாநிலத்தில் இருந்து ஆட்களை கொண்டு வந்து டிரெய்னிங் கொடத்து பணியமர்த்துகிறார். கன்னடம் என்று இருந்தாலே ரிஜெக்ட் செய்கிறார்.

இதனை தொழிலாளர் நலத்துறை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர்களால் முடியாது. முதல்வர் டிகே சிவக்குமார் பிடதி டவுன்ஷிப் உருவாக்கி வேலை வாங்க நினைக்கிறீர்கள். ஆனால் இப்போதைய சூழலில் உங்களால் முடியாது. இதனால் இதற்கு முதலில் தீர்வு கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.