பாண்டி பழைய பேட்டி: பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிளாக் பாண்டிதற்போது நண்பர் சிவகார்த்திகேயனையும், தன்னையும் வைத்து சமூக வலைதளங்களில் பேசப்படும் செய்தியை பார்த்து விளக்கம் அளித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் எப்பொழுதும் தனக்கு நண்பர் தான் என்று கூறி பாண்டி கூறியிருப்பதாவது,
8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தை பற்றி இப்போ பேசுகிறார்கள். அப்பொழுது பேட்டி ஒன்றில் ஒவ்வொரு ஆர்டிஸ்ட் பற்றி கேட்டபோது நண்பர் சிவகார்த்திகேயன் பற்றியும் கேட்டார்கள். அந்த நேரத்தில் சிவகார்த்திகேயனை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேனேஜர் அதை தவறாக தகவல் தெரிவித்துவிட்டார். அதனால் என்னுடைய பேட்டி வீடியோவை பார்த்தால் சிவா என்னை அழைத்து பேசுவார் என நினைத்து அப்படி பேசினேன்.
சிவகார்த்திகேயன் மேனேஜர்: ஒரு நண்பனாக என் நண்பனை ஏமாற்றிவிடக் கூடாதே என்று சொன்னேன். ஏதோ ஒரு சூழலில் நான் கஷ்டப்படுவதாக யாரோ சொன்னதை கேட்டு மேனேஜர் மூலம் எனக்கு பணம் கொடுத்துவிட்டார் சிவகார்த்திகேயன். இதை அந்த பேட்டியில் கூறியிருந்தேன். சிவா மேனேஜர் பணத்துடன் வந்தபோது எனக்கு பணம் வேண்டாம் என நானும், அம்மாவும் அவரிடம் கூறினோம். என் நண்பன் பெரிய ஸ்டார். அந்த நண்பர் சொன்னால் நிறைய வாய்ப்புகள் வரும் என்பதால் பணத்திற்கு பதில் வாய்ப்பு கொடுக்கச் சொல்லுங்கள் என மேனேஜரிடம் அம்மாவும், நானும் தெரிவித்தோம்.
சிவகார்த்திகேயனுக்கு புரிந்தது: அம்மாவோ மேனேஜரிடம் இருந்து 20 ரூபாய் மட்டும் வாங்கி அதை சாமி முன்பு வைத்துவிட்டார். பணப் பிரச்சனை இருக்கத் தான் செய்யும். இந்த சம்பவத்தை நான் பேட்டியில் சொன்னது வேறு அர்த்தத்தில் புரிந்து கொண்டு அவருக்கு ப்ரொஜெக்ட் ஆனது. அதை பார்த்துவிட்டு அந்த பேட்டியில் உள்ள விபரங்களை நீக்கச் சொல்லி நீக்க வைத்தேன். இதனால் எனக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே நெருடலாகிவிட்டது.
இதையடுத்து அவரை சந்தித்து எதையும் தப்பாக எடுத்துக்கொள்ளாதே நண்பா என்றேன். எனக்கு கை கால் நல்லா இருக்கும்போது என்னால் உழைத்து சாப்பிட முடியும். படுத்த படுக்கையாக இருந்தபோது நீ உதவினால் அது பெரிய விஷயம் ஆகும். ஆனால் நான் ஆரோக்கியமாக இருக்கும்போது உன் பணத்தை வாங்கினால் அது எனக்கு கஷ்டமாகிவிடும் என நான் சொன்னதை சிவகார்த்திகேயன் புரிந்து கொண்டார். நான் எதையும் தப்பா எடுக்கல என்றார்.
பாண்டி கோரிக்கை: எங்களுக்கு இடையே சண்டை இல்லை குழப்பம் தான் ஏற்பட்டது. இந்நிலையில் இத்தனை வருஷம் கழிச்சு வாய்ப்பு கேட்டவருக்கு பணத்தை கொடுத்து அசிங்கப்படுத்தினார் சிவகார்த்திகேயன். அதனால் மனமுடைந்தார் பிளாக் பாண்டி என சோஷியல் மீடியாவில் வந்திருக்கிறது. ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இதை பார்த்து வருத்தமாக உள்ளது.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
நீங்கள் பிழைக்க ஆயிரம் வழிகள் உள்ளது. தவறான செய்தியை பரப்பாதீங்க என பாதம் தொட்டு கேட்கிறேன். சினிமாவில் கஷ்டப்பட்டு தான் மேலே வருகிறார்கள். இது சிவகார்த்திகேயனுக்கும், எனக்கும் தவறாக ப்ரொஜெக்ட் ஆகிவிடக் கூடாது. நான் சோற்றுக்கே வழியில்லாமல் இருப்பது போன்று தெரிவிக்கக் கூடாது. எல்லோரும் போராடுகிறார்கள். சரியான நேரம் வரும்போது முன்னேறுவார்கள். இதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். யாரையும் கஷ்டப்படுத்தாமல் செய்தி வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். என் வருத்தத்தை சிவகார்த்திகேயனிடம் இதன் மூலம் தெரிவிக்கிறேன். மன்னிச்சுக்கோப்பா சிவா என்றார்.
Source link
