IPL 2026 | பஞ்சாப் அணியின் 2வது மிகப்பெரிய சேசிங்

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 17-வது லீக் போட்டி நியூ சண்டிகரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் ஆடிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 219 ரன்கள் சேர்த்தது. டிராவிஸ் ஹெட் 38 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 74 ரன்னில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 27 ரன்னில் வெளியேறினார். கிளாசன் 39 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பிரியான்ஷ் ஆர்யா 57 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 51 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பஞ்சாப் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி பெற்ற 2வது அதிகபட்ச சேசிங் இதுவாகும்.

பஞ்சாப் அணி கடந்த 2024-ம் ஆண்டில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடி, ஐதராபாத்துக்கு எதிராக 223 ரன்கள் எடுத்து இந்தப் போட்டியில் வென்றுள்ளது.

Source link