பிரம்மாண்ட பட்ஜெட், முன்னணி நடிகர் என எவ்வளவு பெரிய படம் திரையரங்கில் வெளியானாலும் ஒ.டி.டி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அதன் காரணமாக அடுத்த வாரம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது என்பதை இந்த வாரமே தெரிந்துகொள்ள வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் அடுத்த வாரம் ஓ,டி.டி தளங்களில் வெளியாக உள்ள படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
பத்தா
பாலாஜி தரணிதரன் – விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ள படம் பத்தா. லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ள இந்த படம் 90-ஸ் ரவுடியின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அட்லி தயாரித்துள்ள இந்த படம், திரையரங்குகளில் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், வரும் அக்டோபர் 29-ந் தேதி ஓ.டி.டி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
சிக்மா
முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமான படம் சிக்மா. சந்தீப் கிஷான் நாயகனாக நடித்துள்ள இந்த படம் கடந்த அக்டோபர் 2-ந் தேதி வெளியான பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், வரும் அக்டோபர் 29-ந் தேதி இந்த படம் ஓ.டி.டி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்பில் அவன்
அசோக் செல்வன் நாயகனாக நடித்துள படம் அன்பில் அவன். ப்ரீத்தி முகுந்தன் நாயகியாக நடித்துள்ள இந்த படம் அக்டோபர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் வரும் அக்டோபர் 30-ந் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரிச்சன் அன்ட் சன்ஸ்
பிஜூமேனன் நடிப்பில் கடந்த அக்டோபர் 2-ந் தேதி வெளியான படம் அவரிச்சன் அன்ட் சன்ஸ். காமெடியை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம், அக்டோபர் 30-ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
இம்மார்ட்டல்
ஜி.வி.பிரகாஷ் கயாடு லோகர் நடிப்பில் வெளியான படம் இம்மார்ட்டல், ரொமான்டிக் ஹாரார் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம், கடந்த செப்டம்பர் 4-ந் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த படம், அக்டோபர் 30-ந் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியாக உள்ளது.
மிர்சாப்பூர்
இந்தியில் வெப் தொடராக வெளியாகி இந்தியா முழுவதும் பெரிய வரவேற்பை பெற்ற மிர்சாப்பூர் வெப் தொடர் திரைப்படமாக உருவானது. கடந்த செப்டம்பர் 4-ந் தேதி வெளியான இந்த படம், 90 கோடியில் தயாராகி 325 கோடி வசூலித்த நிலையில், இந்த படம் அக்டோபர் 30-ந் தேதி அமேசான் ப்ரைம் ஓ,டி.டி தளத்தில் வெளியாக உள்ளது,
