நடிகர் விஜய், நடிகர் அஜித்தை லண்டனில் சந்தித்துக் கட்டிப்பிடித்துக் கொண்டதைச் சுட்டிக்காட்டிப் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இனிமேல் விஜய் கட்டிப்பிடிக்க வேண்டிய நபர் நடிகர் தனுஷ்தான் என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சு கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் வருகைக்குப் பிறகு, திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் குறித்த அரசியல் தலைவர்களின் கருத்துகளும் கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக, விஜய் மற்ற நடிகர்களுடன் கொண்டிருக்கும் நட்பு, அவர்களுடனான சந்திப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களின் கருத்துகள் அவ்வப்போது பேசுபொருளாகின்றன. அந்த வகையில், நடிகர்கள் விஜய், அஜித் மற்றும் தனுஷ் ஆகியோரைக் குறிப்பிட்டு ஆர்.பி. உதயகுமார் பேசிய கருத்துகள் தற்போது கவனம் ஈர்த்துள்ளன.
கூட்டத்தில் பேசிய ஆர்.பி. உதயகுமார், நடிகர் அஜித் தமிழகத்தில்தான் பல ஆண்டுகளாக வசித்து வருவதாகக் குறிப்பிட்டார். இதனைச் சுட்டிக்காட்டிய அவர், “அஜித் 40 வருஷமா இங்கதான் இருக்காரு. இங்கயே கட்டிப்பிடிக்க வேண்டியதுதானே? லண்டன் போய் கட்டிப்பிடிச்சிக்கிறாங்க” என்று நகைச்சுவையாகக் கூறினார். அவரது இந்தப் பேச்சு அங்கிருந்தவர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய அவர், “இனிமே நீங்க கட்டிப்பிடிக்க வேண்டிய ஆள் தனுஷ்” என்று கூறி தனது பேச்சை மேலும் சுவாரசியமாக்கினார். விஜய், அஜித் சந்திப்பை மையமாக வைத்து தனுஷையும் இதில் இணைத்துப் பேசிய அவரது கருத்து கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.
நடிகர் விஜய்யும் நடிகர் அஜித்தும் நேரில் சந்தித்துக் கொண்டது குறித்த செய்திகள் ரசிகர்கள் மத்தியில் ஏற்கெனவே கவனம் பெற்றிருந்த நிலையில், அந்தச் சந்திப்பை அரசியல் மேடையில் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுப் பேசிய ஆர்.பி. உதயகுமாரின் கருத்துகள் பேசுபொருளாகியுள்ளன. குறிப்பாக, லண்டனில் சந்தித்துக் கட்டிப்பிடித்ததைச் சுட்டிக்காட்டி, அதை விஜய் எப்படி செய்தாரோ அப்படியே மேடையில் கையை கட்டி அணைத்து செய்து காண்பித்து பேசி தமிழகத்திலேயே சந்தித்திருக்கலாமே என்ற தொனியில் அவர் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
மேலும், அடுத்ததாக தனுஷைக் குறிப்பிட்டுப் பேசியதன் மூலம் தனது கருத்தை நகைச்சுவையான திருப்பத்துடன் முடித்தார். அரசியல் மேடைகளில் எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் பிரபலங்கள் குறித்த விமர்சனங்கள் வழக்கமாக இடம்பெறும் நிலையில், இந்தப் பேச்சு சற்று வித்தியாசமான நகைச்சுவைத் தொனியில் அமைந்தது. விஜய், அஜித், தனுஷ் என மூன்று முன்னணி நடிகர்களின் பெயர்களையும் இணைத்துப் பேசிய ஆர்.பி. உதயகுமாரின் இந்தக் கருத்துகள் தற்போது கவனம் ஈர்த்து வருகின்றன.
