சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மற்றும் முதல்வர் ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்யவில்லை என்று

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மற்றும் முதல்வர் ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்யவில்லை என்று வரிக்கு வரி யாரும் அர்த்தம் தேட முயல வேண்டாம் என முகுல் வாஸ்னிக் தெரிவித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் அளித்த பேட்டி:

தமிழக சட்டசபை தேர்தலில், எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கையுடன், கூட்டணி கட்சிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வருகிறோம். தமிழக மக்களின் மனநிலையும், எங்களுக்குச் சாதகமாக உள்ளது.

தமிழக தேர்தலில், காங்கிரஸ் தலைவர்களின் பிரசார அட்டவணையை விரைவில் அறிவிப்போம். தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தை விட, முதல்கட்ட தேர்தல் நடந்த மாநிலங்களில், முதலில் கவனம் செலுத்துவதே, எங்களின் நோக்கமாக இருந்தது.

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரத்திற்கு வருவது குறித்த அறிவிப்புக்கு, இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். ராகுல் மற்றும் ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்ய வில்லை என்று, நீங்கள் வரிக்கு வரி அர்த்தம் தேட முயல வேண்டாம். தமிழக மக்கள் மீண்டும் எங்கள் கூட்டணி மீது நம்பிக்கை வைப்பர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link