காலையில் வெயில்… மதியத்தில் வெளுத்து வாங்கிய கனமழை: கோவையில் வீதிகளைச் சூழ்ந்த வெள்ளநீர்

கோவையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை நீடித்து வரும் சூழலில், இன்று காலையில் வெயில் அதிகரித்து நிலவியதைத் தொடர்ந்து மதியத்திலேயே மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கோவையில் காலையில் வெயிலின் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மதியத்தில் இருந்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கோவையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வந்த நிலையில், இன்று மதியமே கனமழை பெய்யத் தொடங்கியது.

covai rain

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், காந்திபுரம், டவுன்ஹால், சிட்கோ, உக்கடம் உள்ளிட்ட மாநகரின் முக்கியப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காலையில் வெயில் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

covai rain

முக்கியச் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் ரெயின்கோட் அணிந்தபடி பயணம் மேற்கொண்டனர். மேலும், மழை காரணமாகச் சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழைநீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

covai rain

செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்

Source link