கனமழை எச்சரிக்கை; புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. இது 28ம் அதி தீவிர புயலாக விசாகப்பட்டினத்தில் கரையை கடக்கிறது. இதையொட்டி, தமிழகம், புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்ததால், பல மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரிக்கு மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரி, காரைக்காலில் நாளை (அக்.,26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும், கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, ராமநாதபுரம் உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியைப் போலவே, தமிழகத்திலும் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source link