வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸை எட்டும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதுடில்லி: தலைநகர் டில்லியில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 15ம் தேதி 40 டிகிரி செல்ஷியஸை எட்டும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

டில்லி சப்தர்ஜங்கில் வெப்பநிலை அதிகபட்சமாக , 34.7 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இந்தப் பருவத்தின் இயல்பை விட, 1.4 டிகிரி குறைவு எனவும், ஏப்ரல் 10 ஆம் தேதி அன்றை விட, 1.9 டிகிரி செல்ஷியஸ் அதிகம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதேநேரத்தில், குறைந்த பட்ச வெப்பநிலை 18.6 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இந்தப் பருவத்தின் இயல்பை விட 2.4 டிகிரி செல்ஷியஸ் குறைவு. அதேநேரத்தில், ஏப்ரல் 10 ஆம் தேதி அன்றை விட, 2.3 டிகிரி செல்ஷியஸ் அதிகம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 34.4 டிகிரி செல்ஷியஸாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 19.5 டிகிரி செல்ஷியஸாகவும் இருந்தது. இது, முன் தினத்தை விட, 3.9 டிகிரி செல்ஷியஸ் அதிகம். லோதி சாலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 17.8 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது. இது, முன் தினத்தை விட 2.6 டிகிரி அதிகம்.

அதேநேரத்தில், குறைந்தபட்ச வெப்பநிலை 18 முதல் -20 டிகிரி செல்சியஸாகவும், நாளை மறுநாள் 20 முதல் -22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை , 35- முதல் 37 டிகிரி செல்ஷியஸாகவும், 15ம் தேதியன்று 38 – -40 டிகிரி செல்ஷியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பகலில் மணிக்கு 15 முதல் 25 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. காற்றின் தரக் குறியீடு மாலை 4:00 மணிக்கு 123ஆக பதிவாகி மிதமான நிலையில் இருந்தது.

டெல்லிக்கான காற்றுத் தர முன்னறிவிப்பு அமைப்பு, அடுத்த சில நாட்களுக்கு காற்றின் தரம் மிதமான நிலையிலேயே இருக்கும் என கணித்துள்ள டில்லி காற்று தர முன்னறிவிப்பு அமைப்பு, அடுத்த வாரம் காற்றின் தரம் மோசமான நிலைக்கு செல்லும் என கூறியுள்ளது.

Source link