வதோதரா: இந்தியா – ஜிம்பாப்வே இடையிலான 2வது ஒருநாள் மகளிர் கிரிக்கெட் போட்டி, குஜராத்தின் வதோதராவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய வீரர்கள் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா (0), ஷபாலி வர்மா (8) ஏமாற்றம் அளித்தனர்.
பிரதிகா ராவல், ஹர்மன்ப்ரீத் கவுர் சிறப்பாக ஆடி ரன் குவித்தனர். பிரதிகா ராவல் 61 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் (126), தீப்தி ஷர்மா (106 நாட் அவுட்) சதம் அடித்தனர். 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 328 ரன் குவித்தது.
இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் 207 ரன் மட்டுமே குவிக்க முடிந்தது. 121 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, முபாசிக்வா 49 ரன்னும், முகேரி டிரிபானோ 46 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வைஷ்ணவி சர்மா 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 3 விக்கெட்டும், ஸ்ரீசாரணி, கலிதா, சயாலி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய முன்னிலை பெற்றுள்ளதோடு, தொடரையும் கைப்பற்றியது.
