PAK vs ENG ODI – 8:42 மணிக்கு இங்கிலாந்து வெற்றி: பிறகு, 9:01 மணிக்கு பாகிஸ்தான் வென்றதாக அறிவிப்பு – pakistan team beat england team by 1 wicket in tri series 2026

பாகிஸ்தானில், முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், 4ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், இங்கிலாந்து அணி வென்றால் மட்டுமே பைனல் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதால், இப்போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து இன்னிங்ஸ்: இப்போட்டியில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஓபனர் பென் டக்கெட் தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி, 111 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 105 ரன்களை குவித்து அசத்தினார். அடுத்து, சாம் கரண் 52 பந்தில் 42 ரன்களை சேர்த்தார்.

இப்படி, இருவரும் சிறப்பாக விளையாடிய நிலையில், இறுதிக் கட்டத்தில், 10ஆவது இட பேட்டர் கஸ் அட்கின்சன் 28 பந்தில் 36 ரன்களை எடுத்து அசத்தினார். இப்படி,மூன்று பேட்டர்கள் மட்டுமே சிறப்பாக விளையாடினார்கள். மற்ற பேட்டர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால், இங்கிலாந்து அணி, 46.4 ஓவர்கள் முடிவில் 241/10 ரன்களை மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தான் அணியில், ஷஹீன் அப்ரீதி, 8.4 ஓவர்களில் 46 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். ரசவுல்லா 8 ஓவர்களில் 38 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார்.

பாகிஸ்தான் இன்னிங்ஸ்: அடுத்து, 242 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், டாப் ஆர்டர் பேட்டர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பக்கர் ஜமான் 10 (18), சைய் அயுப் 6 (12), பாபர் அசாம் 10 (12), சாட் பேக் 32 (22), சல்மான் அகா 26 (49), ஹசன் நவாஸ் 15 (330 போன்ற பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஷாக் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இறுதிக் கட்டத்தில், 8ஆவது இட பேட்டர் சதாப் கான், தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி அசத்தினார். இருப்பினும், ஒரு கட்டத்தில், பாகிஸ்தான் அணி, 154/9 எனத் தடுமாறியது. பிறகு, சதாப் கான், ஹரிஷ் ராப்புக்கு, முடிந்தவரை ஸ்ட்ரைக் கொடுக்காமல் ஆட ஆரம்பித்தார்.

இந்நிலையில், சதாப் கான், 97 ரன்களை எடுத்திருந்தபோது, கஸ் அட்கின்சன் LBW ஆனார். நடுவரும் அவுட் கொடுக்க, பிறகு இங்கிலாந்து வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகொடுக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், கடைசி நொடியில், சதாப் கான் ரிவியு எடுத்தார். இருப்பினும், பந்து புல் டாஸாக, பேடில் பட்டதால், இதனை அவுட் என்றுதான் அனைவரும் கருதினார்கள். சதாப் கானும், அப்படிதான் நம்பி, இங்கிலாந்து வீரர்களுடன் கை கொடுக்க ஆரம்பித்தார். இந்நிலையில், நிவியுவின் போது, பந்து, பேடில் லேசாக உரசியது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, நாட்அவுட் என அறிவிக்கப்பட்டது.

இதனால், உடனே இங்கிலாந்து வீரர்கள் பீல்டிங்கிற்கு சென்ற நிலையில், டக்அவுட்டில் இருந்த பாகிஸ்தான் அணியின் சக வீரர்களும் மீண்டும், அவரவர் இடத்தில் அமர துவங்கினர்.

பிறகு, சதாப் கான், தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அடுத்து, தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி, 96 பந்தில் 13 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 113 ரன்களை அடித்து, மேட்ச் வின்னராக இருந்தார். இவருடன் ரசவுல்லா 8 (15), ஹரிஸ் ராப் 7 (19) ஆகியோர் கடைசி நேரத்தில், ஓரளவுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இறுதியில், பாகிஸ்தான் அணி, 47.1 ஓவர்களில் 243/9 ரன்களை அடித்து வெற்றியைப் பெற்றது.

பாகிஸ்தான் அணி, 154/9 என்பதில் இருந்து, அடுத்து கடைசி விக்கெட்டில் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, வரலாற்று வெற்றியைப் பெற்று அசத்தினார்கள்.

இதன்மூலம், முத்தரப்பு தொடரில், பாகிஸ்தான் அணி, பைனலுக்கு முன்னேறுவது உறுதியாகி உள்ளது. அடுத்து, ஒரு இடத்திற்கு இலங்கை, இங்கிலாந்து இடையில் போட்டி இருக்கிறது. இலங்கை அணி, அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக தோற்று, இங்கிலாந்துக்கு எதிராக தோற்றால், 2 புள்ளிகளுடன் இருக்கும்.

இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிராக பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே, இலங்கையை பின்னுக்கு தள்ளி, பைனலுக்கு முன்னேற முடியும் என்ற நிலைமை இருக்கிறது.

Source link