இந்த வார ராசிபலன் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி.
மேஷம்:
மேஷராசி அன்பர்களே!
குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கடந்த வாரம் போலவே கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அவர்களைக் கண்டிக்காமல் அனுசரித்துச் செல்வது நல்லது.
புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமை யாகப் பாடுபடவேண்டி வரும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். அலுவலகத்துக்குச் செல் லும் பெண்களுக்கு பதவிஉயர்வும் ஊதியஉயர்வும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 27,29
அதிர்ஷ்ட எண்கள்: 2,5
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே!
ரிஷபம்:
ரிஷபராசி அன்பர்களே!
பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்ய வேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்வதையும் தவிர்க்கவும். பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் உடல் அசதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 29,31
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
சந்திராஷ்டமம் : 27,28 இரவு வரை
வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே
மிதுனம்:
மிதுனராசி அன்பர்களே!
வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். வார பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பணவரவு அதிகரிக்கும். எதிர் பாராத செலவுகளும் ஏற்படும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக் காதீர்கள். சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர் களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
வியாபாரத்தை விரிவு படுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.
அதிர்ஷ்ட நாள்கள்: 27, ஆக 2
அதிர்ஷ்ட எண்கள்: 7, 9
28 இரவு முதல் 29,30,31 காலை வரை
வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
கடகம்:
கடகராசி அன்பர்களே!
எதிலும் பொறுமையாக இருக்கவேண்டிய வாரம். பணவரவைப் பொறுத்தவரை திருப்திகரமான போக்கே காணப்படுகிறது. செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யவும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை செலவுகளை ஏற்படுத்துவதுடன் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சக ஊழியர்கள் தங்கள் பணிகள் தொடர்பாக உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள்.
வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும். புதிய முதலீடுக்கான பண உதவி கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்: 27,30
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9
சந்திராஷ்டமம்: ஆக 31முதல் 1,2 மாலை வரை
வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள்
தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
சிம்மம்:
சிம்மராசி அன்பர்களே!
வருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் செலவுகள் இருக் காது. பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். தந்தைவழி உறவினர்களால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். நண்பர்களின் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்குவதற்கு உகந்த வாரம்.
வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக வாய்ப்பு உண்டு. வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். அதிகாரிகள் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவார்கள்.
வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படும். அலு வலகம் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்ட நாள்கள்: 28,31
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
சந்திராஷ்டமம் : ஆக 2 மாலை முதல்
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
கன்னி:
கன்னிராசி அன்பர்களே!
பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். கொடுத்த கடனும் திரும்பக் கிடைக் கும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு பதவிஉயர்வு அல்லது ஊதியஉயர்வு கிடைப்பதற்கும் சாத்தியமுண்டு. இதுவரை கண்டிப்பாக இருந்த அதிகாரி கனிவுடன் நடந்துகொள்வார்.
வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், அனுபவம் மிக்கவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்யவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 27,31
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்.
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
அன்னைகை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து
இன்னெடும் கடலைநீயும் எங்ஙனம் கடந்தாய், என்ன
உன்னத நெடியமாலாய் உயர்ந்தெழுந் தடங்கி நின்று
மன்னுதாய் ஆசி பெற்ற மாருதி பாதம் போற்றி
துலாம்:
துலாராசி அன்பர்களே!
உற்சாகமான வாரம். தேவையான பணம் இருப்பதால் செலவுகளை சமாளிப்பதில் பிரச்னை இல்லை. கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களும் அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்கள். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். அவருடன் சுமுகமான உறவு ஏற்படும்.
அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசர ணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும். சலுகைகளும் கிடைக்கக்கூடும்.
வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கும். என்றாலும் உற்சாகத்துடன் சமாளித்துவிடுவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவல கத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 29, ஆக 1
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை
விருச்சிகம்:
விருச்சிகராசி அன்பர்களே!
பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும். பிள்ளை களால் பெருமை உண்டாகும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் ஈடுபட சாதகமான வாரம்.
அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்பு பவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம். நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் நேரம் வேலை செய்யவேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 30, ஆக 1
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
தனுசு:
தனுசுராசி அன்பர்களே!
வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. மற்றவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்கமுடியாது.
வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணி யாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 27,31
அதிர்ஷ்ட எண்கள்: 4, 5
வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே
மகரம்:
மகரராசி அன்பர்களே!
பணவரவுக்கு குறைவிருக்காது. ஆனாலும், எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளால் கையிருப்பு குறைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். சிலருக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கூடுமானவரை அவர்களைக் கண்டிக்காமல் அனுசரித்துச் செல்வது நல்லது.
அலுவலகத்தில் உங்களின் ஆலோசனைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். அதன் காரணமாக சில சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் நீங்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் சோர்வு உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 31, ஆக 1
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
கும்பம்:
கும்பராசி அன்பர்களே!
பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகள் குறைவு என்பதால் சிறிது சேமிக்கவும் முடியும். பிள்ளை கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவினர்கள் வருகையால் வீட் டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான வெளியூர்ப் பயணம் சாதகமாக முடியும். நீண்டநாள்களாக செலுத்த முடியாமல் இருந்த குலதெய்வப் பிரார்த்தனையை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதனால் நன்மையே ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் சுமுகமான போக்கு ஏற்படும். பங்கு தாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாக மாக ஈடுபடுவார்கள்.
குடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 29, ஆக 2
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!
மீனம்:
மீனராசி அன்பர்களே!
எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந் நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். பிள் ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் புகழ் பெற்ற புனிதத்தலங்களைத் தரிசிக் கும் வாய்ப்பு ஏற்படும். தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் வேண்டாம். பணியின் காரண மாகப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக கூடுதலாக உழைக்கவேண்டி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்குத் தேவையான கடன் கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 28,30
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே
