தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அர்னாப் புயல் எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் உருவாகவுள்ளது. வங்கக்கடலில் இன்று (26-10-26) புயலாக வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை (27-10-26) தீவிரப் புயலாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், புதுச்சேரி, காரைக்கால் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (26-10-26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல், திண்டுக்கல், கோவை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானில் மழை விட்டு விட்டு பெய்வதால், அட்டுவம்பட்டியில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
