“எந்த பால் பொருட்கள் உற்பத்தியையும் நிறுத்தவில்லை” – ஆவின் நிறுவனம் விளக்கம்!

சென்னை: ஆவின் பால் பொருட்​களின் உற்​பத்தி நிறுத்​தப்​பட்​டிருப்​ப​தாக வெளி​யான தகவலை ஆவின் நிர்​வாகம் மறுத்​துள்​ளது. பொதுமக்கள் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக மக்​களுக்கு பால் மற்​றும் பால் பொருள்​கள் விற்​பனை செய்​யும் பணி​யில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை பால் நிறுவனமான ஆவின் நிறு​வனம் ஈடு​பட்டு வரு​கிறது. ஆவின் வாயி​லாக, தினசரி சுமார் 34 லட்​சம் லிட்​டர் பால் கொள்​முதல் செய்​யப்​படு​கிறது. பாலை பதப்​படுத்​தி, பலவகை​களில் பிரித்து விற்​பனை செய்​யப்​படு​கிறது.

இதுத​விர, பால் உப பொருள்​களான வெண்​ணெய், நெய், தயிர், பால்​கோவா உள்பட 225 வகை​யான பால் பொருள்​களை தயாரித்​து, ஆவின் பால​கங்​கள் மற்​றும் சில்​லறை விற்​பனை​யாளர்​கள் மூலம் விற்​பனை செய்​யப்​படு​கிறது.

சென்​னை​யில் தினசரி ரூபாய் 1.50 கோடி மதிப்​பிலான பால் மற்​றும் பொருட்​கள் விற்​பனை​யாகின. தற்​போது, ஆவினில் 100-க்​கும் மேற்​பட்ட பால் பொருட்​களின் உற்​பத்தி நிறுத்​தப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யானது. ஆவினில் 100-க்​கும் மேற்​பட்ட பால் பொருட்​கள் உற்​பத்தி நிறுத்​தப்​பட்​டிருப்​ப​தாக வெளி​யான தகவலை ஆவின் நிர்​வாகம் மறுத்​துள்​ளது.

ஆவின் நிர்​வாகம் வெளி​யிட்டுள்ள செய்​திக்​குறிப்​பில், “ஆவின் பால் பொருட்​களின் உற்​பத்தி நிறுத்​தம் குறித்த செய்​தி​கள் முற்​றி​லும் உண்​மைக்​குப் புறம்​பானவை. ஆவின் நிறு​வனத்​தில் தயாரிக்​கப்​படும் எந்​தவொரு பொருளின் உற்​பத்​தி​யும் முழு​மை​யாக நிறுத்​தப்​பட​வில்​லை. நெய், வெண்​ணெய், பனீர், குக்​கீஸ் உள்​ளிட்ட அனைத்து வகை​யான பால் பொருட்​களும் வழக்​கம்​போல தயாரிக்​கப்​பட்​டு, விற்​பனை நிலை​யங்​களுக்​கும் சில்​லறை விற்​பனை முகவர்​களுக்​கும் விநி​யோகம் செய்​யப்​படு​கின்​றன.

தீபாவளிப் பண்​டிகையை முன்​னிட்​டு, பல்​வேறு வகை​யான சிறப்பு இனிப்​பு​கள் தயாரிக்​கப்​பட்​டு, பல்​வேறு நிறு​வனங்​களுக்​கும் வாடிக்​கை​யாளர்​களுக்​கும் தேவைக்​கேற்ப விநி​யோகம் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. எனவே, ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு மாறானவை. பொதுமக்கள் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.

தயிர், லஸ்ஸி, பனீர் உள்ளிட்ட முக்கியப் பால் பொருட்களின் விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது ஆவின் பால் பொருட்களுக்கு நுகர்வோரிடையே தொடர்ந்து அதிகரித்து வரும் வரவேற்பை பிரதிபலிக்கிறது.

மேலும், விற்​பனை முகவர்​களிட​மிருந்து பெறப்​படும் தேவைக் கணிப்​புப் பட்​டியல்​களின் அடிப்​படை​யில், அவர்​களுக்​குத் தேவை​யான பால் பொருட்​களைத் தடை​யின்றி வழங்​கு​வதற்​கான நடவடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.