கிருஷ்ணகிரியில் சோகம்; இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றியதில் 2 பேர் உடல் கருகி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் சுங்கச்சாவடி அருகே எதிர் எதிரே வந்த இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரு பைக்கிலும் தீப்பற்றி எரிந்தது. மளமளவென பற்றி எரிந்த இந்த தீயில், ஒரு பைக்கில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

மற்றொரு பைக்கில் வந்த இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Source link