சீனா அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார் தைவான் எதிர்க்கட்சி தலைவர்

பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங்கை, தைவானின் முக்கிய எதிர்க்கட்சியான கே.எம்.டி., எனும் குவோமிண்டாங் கட்சியின் முன்னாள் தலைவர் மா யிங் ஜியூ, 11 ஆண்டுகளுக்கு பின் நேற்று சந்தித்து பேசினார்.

நம் அண்டை நாடான சீனா, தைவானை தன் நாட்டின் ஒரு பகுதி என்று கூறி வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் உள்ளது. இந்நிலையில், தைவாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மா யிங் ஜியூ, சீன அதிபரை நேற்று சந்தித்து பேசினார். மா யிங் ஜியூ தற்போது அதிகார பதவியில் இல்லை என்றாலும், தைவானின் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராவார். இதற்கு முன், ஷி ஜின்பிங்கை, கடந்த 2015ம் ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பை, தைவானின் தற்போதைய ஆளுங்கட்சியான ஜனநாயக முற்போக்கு கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

Source link