பொதுவாக செல்வம் சேர வேண்டும், பணக்கஷ்டம் தீர வேண்டும் என்றால் மகாலட்சுமியை அல்லது குபேரரை வழிபட வேண்டும் என்று தான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். குபேரை வியாழக்கிழமையிலும், மகாலட்சுமியை வெள்ளிக்கிழமையிலும் வழிபட்டால் வீட்டில் எப்போதும் செல்வம் நிலையாக இருக்கும். வாழ்க்கையில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் என பலரும் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் வீட்டில் செல்வம், லட்சுமி கடாட்சம் மற்றும் மகிழ்ச்சி எப்போதும் நிலைத்திருக்க விநாயகரை முறைப்படி வழிபாடு செய்வது அவசியமாகும். தடைகளை நீக்கி சுபிட்சத்தை வழங்கும் விநாயகரை வீட்டில் எவ்வாறு வழிபட வேண்டும் என்பதற்கான எளிய வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் செல்வம் நிலைத்திருக்க விநாயகர் வழிபாடு :
– வீட்டில் விநாயகர் படத்தை அல்லது சிலையை கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கி இருக்குமாறு பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
– விநாயகரின் முகம் வடக்கு நோக்கி இருப்பது மிகவும் விசேஷமானது, ஏனெனில் இது குபேரனுக்குரிய திசையாகும்.
– தும்பிக்கை வலப்பக்கம் திரும்பியிருக்கும் விநாயகர் சிலை வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும் செல்வத்தையும் ஈர்க்கும்.
– வெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட விநாயகரை வீட்டில் வைத்து வழிபட்டால் செய்வினை, கண் திருஷ்டி நீங்கி செல்வம் பெருகும்.
– வீட்டில் எப்போதும் செல்வம் நிலையாக தங்குவதற்கு, நிலை வாசலில் வெளிப்பக்கம் பார்த்தவாறு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் படத்தை மாட்டி வழிபடுவது ஒரு பாரம்பரிய நம்பிக்கையாகும்.
– விநாயகருக்கு வெட்டிவேர் மாலை சாத்தி வழிபடலாம்.
– வெட்டிவேரால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து வழிபட்டால் இன்னும் சிறப்பு.
– விநாயகருக்கு முன் தினமும் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி, அவருக்கு மிகவும் பிடித்த அருகம்புல் மற்றும் எருக்கம்பூ மாலை அணிவித்து பூஜிப்பது செல்வவளத்தை அதிகரிக்கும்.
– வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளிலும், மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் அல்லது அர்ச்சனை செய்வது வீட்டில் பணத்தட்டுப்பாட்டை நீக்கும்.
– வீட்டின் நிலைவாசலுக்கு மேல் கணபதி படத்தை மாட்டி வைப்பது லட்சுமி தேவியை வீட்டிற்குள் நிரந்தரமாக தங்கச் செய்யும்.
– வீட்டில் எப்போது விநாயகர் படத்தையோ அல்லது சிலையையோ தனியாக வைத்து வழிபடாமல், லட்சுமி தேவியின் படத்தையோ அல்லது சிவன்-பார்வதி படத்தையோ உடன் வைத்து வழிபடுவதால் வீட்டில் செல்வ வளமும், தெய்வீக அருளும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
வேறு என்ன செய்யலாம்?
– காலையிலும் மாலையிலும் வீட்டில் தீபம் ஏற்றுவது மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் தரும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 5 முகங்கள் கொண்ட விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பு.
– வீட்டில் வலம்புரிச் சங்கு வைத்து, அதில் நீர் நிரப்பி தினமும் பயன்படுத்தி வந்தால் வற்றாத செல்வம் சேரும்.
– வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்குக் குங்குமம் மற்றும் தண்ணீர் வழங்குவதுடன், மஞ்சள் கிழங்கு கொடுப்பது பல ஜென்மத்துப் புண்ணியத்தைத் தரும்.
– வாஸ்து குறிப்புக்களை பின்பற்றி சில மாற்றங்களை செய்வதாலும் வீட்டில் செல்வம் சேருவது அதிகரிக்கும்.
