Exclusive: பிக் பாஸ் ராகவ் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்: தெரிந்தால் ரொம்ப சந்தோஷப்படுவீங்க

ராகவுக்கு ஆபரேஷன்: உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வெளியேறியதால் ராகவ் திரும்பி வர வேண்டும் என்பதே பிக் பாஸ் பார்வையாளர்களின் விருப்பமாக உள்ளது. மேலும் திரும்பி வரும்போது பாட்டு எழுதிக் கொண்டு வாங்க ராகவ்னு பிக் பாஸ் சொன்னதால் அவர் கம்பேக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என நம்பப்படுகிறது. ராகவும் பிக் பாஸ் வீட்டிற்கு நாளைக்கே திரும்பிச் செல்லக் கூட தயாராக இருப்பதாக நம்மிடம் கூறியிருக்கிறார். லிகமன்ட் டேர் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். வரும் புதன்கிழமை அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது என ஹெல்த் அப்டேட் கொடுத்தார்.

ராகவுக்கு வருத்தம்: தமிழ் சமயத்திற்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது, பிக் பாஸ் வீட்டில் தங்கிய அனுபவம் சுவாரஸ்மாக இருந்தது. செல்போன் இல்லாமல், போட்டி என அந்த வீட்டில் இருந்தது வித்தியாசமான அனுபவம். இது வாழ்க்கையில் ஒருமுறை தான் கிடைக்கும். இது எத்தனை பேருக்கு கிடைக்கும்?. அதனால் நாம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தான் சென்றேன். எங்கெல்லாம் பெர்ஃபார்ம் பண்ண முடியமோ அங்கெல்லாம் செய்தேன். கேமுக்காக நான் வேறு மாதிரி நடந்து கொள்ள முடியாது அல்லவா அதில் எனக்கு உடன்பாடும் இல்லை.

இப்படி பாதியிலேயே வெளியே வந்தது மட்டும் தான் வருத்தம் அளிக்கும் ஒரே விஷயம் ஆகும். ஸ்ட்ரெஸ்ஸாக இருந்தது, கேமுக்காக நம்மை மாத்திக்கணுமா என தோன்றியது. ஆனால் இதை நான் என்ஜாய் செய்தேன். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு என்னை எல்லோரும் ராகவ்ணா, ராகவ் ப்ரோனு கூப்பிடுகிறார்கள். அது சந்தோஷம். நான் நாமினேஷனிலேயே இல்லை என்பதால் வெளியே வருவேன் என நினைக்கவில்லை.

அம்மாவுக்கு சிகிச்சை: வெளியே வந்த உடனேயே கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யலாம், பிடித்ததை எல்லாம் சாப்பிடலாம் என நினைத்தேன். நான் வந்தபோது மனைவி ப்ரீத்தா ஊரில் இல்லை. அம்மாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம். நேற்று முன்தினம் தான் அவங்க டிஸ்சார்ஜ் ஆனாங்க. அதனால் நான் மனைவிக்கு போன் செய்து புலம்பினேன். அதே சமயம் அம்மாவை பார்த்துக்க முடிந்தது. இன்னும் ரிலாக்ஸ் பண்ண முடியல. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு ஒரு 3,4 நாட்கள் ரிலாக்ஸ் பண்ண வேண்டும் என்றார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு உங்களிடம் ஏற்பட்ட மாற்றம் என்னவென்று கேட்டதற்கு, செல்போனை கொஞ்சமா யூஸ் செய்தால் போதும் என தோன்றுகிறது. அது ஒரு மாற்றம். நம்மை சுற்றி இருப்பவர்களிடம் உள்ள பாசம் அதிகமாகியிருக்கிறது. குமரன் எனக்கு போன் செய்து நலம் விசாரித்தார். அது போன்று நட்புகள் கிடைத்திருப்பது நல்ல விஷயம்.

ராகவ் படம் : நான் ஒரு படத்தை இயக்கி, நடித்திருக்கேன். பட வேலை முடிந்துவிட்டது. ரீ எடிட் நடந்தபோது தான் பிக் பாஸ் வாய்ப்பு வந்தது. அதை எடிட்டரிடம் கொடுத்துவிட்டு பிக் பாஸுக்கு போனேன். அந்த படத்தின் பெயர் knock knock. அதை ரிலீஸ் செய்யவிருக்கிறோம். கதவை தட்டும் சத்தம் தான் knock knock. படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். ஏதோ ஒன்னு வரும்போது தானே கதவை தட்டுவார்கள். யார் வருகிறார்கள் என்பதை படம் பார்த்தால் தெரியும் என்றார்.

ராகவ் பதில்: பிக் பாஸ் 10 டைட்டில் வின்னர் யாராக இருக்கும் என அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த யாரிடம் கேட்டாலும் ஒன்று அல்லது இரண்டு பேரின் பெயர்களை தெரிவித்தார்கள். ஆனால் ராகவோ ஒரு மேஜிக் நடக்க வேண்டும் என்று வித்தியாசமான பதிலை அளித்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

டிடிஎஃப் வாசன் வந்த முதல் வாரத்தில் அவர் இப்படி வைரத்தை திருடுவார் என யாரும் நினைத்திருப்பார்களா?. ஆனால் நடந்த பிறகு அவரை எல்லோரும் பாராட்டினாங்க. அது மாதிரி மேஜிக் நடக்கணும். அது யார் மீது வேண்டுமானாலும் நடக்கும் என தெரிவித்தார் ராகவ்.

Source link