கதிஹார்: பீஹாரில் பஸ், லாரி மற்றும் சரக்கு வாகனம் ஆகியவை மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலியாகினர்; 25பேர்

கதிஹார்: பீஹாரில் பஸ், லாரி மற்றும் சரக்கு வாகனம் ஆகியவை மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலியாகினர்; 25பேர் காயமடைந்தனர்.

பீஹாரின் கதிஹார் மாவட்டத்தில் கோராஹா – புல்வாரியா இடையே தேசிய நெடுஞ்சாலையில் 30க்கும் மேற்பட்டோருடன் சரக்கு வாகனம் பூர்னியாவை நோக்கி சென்றது. அப்போது, பூர்னியாவில் இருந்து பஹல்பூர் நோக்கி சென்ற பஸ், கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் மற்றும் அவ்வழியாக வந்த லாரி மீது அடுத்தடுத்து மோதியது.

இதில் சரக்கு வாகனம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டதில் அதில் இருந்த நபர்கள் துாக்கி வீசப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்புக்குழுவினர் உதவியுடன் விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், 10 பேர் பலியாகினர்; 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் சரக்கு வாகனத்தில் வந்தவர்கள் பெரும்பாலானோர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினர் என தெரியவந்துள்ளது.

Source link