விரைவில் விருத்தாசலம் தனி மாவட்டம்: நிறைவேறும் பிரேமலதா கோரிக்கை- முதல்வர் விஜய் முடிவு – cm vijay plans to announce vriddhachalam new district from cuddalore with mla premalatha demand

கடலூர் மாவட்டத்தில் இருந்து விருத்தாசலத்தை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் மக்கள் விரும்பும் நல்ல முடிவை முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார் என்று தெரிய வந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த், என்.எல்.சி பற்றி முக்கியத்துவம் வாய்ந்த விவாதங்கள் நடைபெற்றுள்ள சூழலில் விருத்தாசலம் தனி மாவட்டம் தொடர்பான கோரிக்கையை இங்கே முன்வைக்கிறேன். திருமுதுகுன்றம் என்ற பழைய பெயரை கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு தான் கடலூர் மாவட்டம் செயல்பட்டது.

சட்டப்பேரவையில் பிரேமலதா கோரிக்கை

ஜங்ஷன், முக்கிய நகரங்களை இணைக்கும் சாலை போக்குவரத்து, நீதிமன்ற கட்டமைப்பு, கல்வி மற்றும் மருத்துவ கட்டமைப்பு, அரசு சொந்தமான கணிசமான நிலங்கள் உள்ளிட்டவை அந்நகரில் இருக்கின்றன. இதை மாவட்டமாக அறிவிக்கும் போது திட்டக்குடி, நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். ஏனெனில் விருத்தாசலத்தில் இருந்து கடலூருக்கு செல்ல நீண்ட நேரம் ஆகிறது. எனவே தனி மாவட்ட கோரிக்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதற்கான காலம் கனிந்திருப்பதாக கோட்டை வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேமலதா விஜயகாந்த் அடித்த கமெண்ட்..கர்ஜித்த ஆதவ்

கிரீன் சிக்னல் கொடுக்கும் முதல்வர் விஜய்

இதனை உறுதிபடுத்தும் வகையில் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறர். விருத்தாசலத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், புதிய மாவட்ட கோரிக்கை ஏற்கனவே பேரவையில் வைக்கப்பட்டுள்ளது. அது முதலமைச்சர் விஜய்யின் ஆய்வில் இருக்கிறது. உரிய நேரத்தில் மக்கள் விரும்பும் முடிவை அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

இந்த சூழலில் விருத்தாசலம் தனி மாவட்ட கோரிக்கை எப்போது முதன்முதலில் எழுந்தது என்ற கேள்வி எழுகிறது. 90களில் தென் ஆற்காடு மாவட்டம் கடலூர், விழுப்புரம் என இரண்டாக பிரிக்கப்பட்ட போதே எழுந்திருக்கிறது. தென்மேற்கு பகுதியை தனி மாவட்டமாக பிரித்தால் பெரிதும் பயனளிக்கும் என்றனர். இதற்காக விருத்தாசலத்தை சேர்ந்த வணிகர் சங்கங்கள், உள்ளூர் விவசாய அமைப்புகள், எழுத்தாளர் சங்கங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுத்தனர்.

ஏன் விருத்தாசலம் மாவட்டம் வர வேண்டும்?

வேப்பூர், திட்டக்குடி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இருந்து மாவட்ட தலைநகரான கடலூருக்கு பயணிக்க சுமார் 120 கிலோமீட்டர் தூரம் வரை ஆகிறது. எனவே அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அடிக்கடி இவ்வளவு தூரம் அலைவதில் சிரமங்கள் இருக்கின்றன. கடலூர் மாவட்டம் 10 வட்டங்கள், 9 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டுள்ளது. ஒருபுறம் கடலோரப் பகுதி, மறுபுறம் மேற்கு பகுதி கிராமங்கள் என இரண்டையும் கையாள்வதில் நிர்வாக சுமை காணப்படுகிறது. ஆண்டுதோறும் ஏற்படும் புயல், வெள்ள பாதிப்புகளால் கடலூர் மாநகர் மற்றும் அதனை சுற்றிய கடலோர பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் மாவட்ட நிர்வாகத்தின் கவனம் பெரும்பாலும் சென்று விடுகிறது. இதனால் மேற்கு பகுதியில் இருந்து நகரங்கள் வளர்ச்சியில் பின் தங்குவதாக சுட்டிக் காட்டப்படுகிறது.

விருத்தாசலம் தனி மாவட்டமாக பிரித்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

மேற்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட தலைநகருக்கு நீண்ட தூரம் பயணிப்பது தவிர்க்கப்படும். விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை மையப்படுத்தி தொழில் வளர்ச்சி ஏற்படும். உதாரணமாக பீங்கான் தொழில், முந்திரி ஆலைகள், எண்ணெய் வித்துகள், சிப்காட் போன்றவை விரிவுபடுத்தப்படும். விருத்தாசலத்தில் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பல்வேறு துறை அலுவலகங்கள் வருவதால் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் புதிதாக உதயமாகும். விருத்தகிரீஸ்வரர் கோயில், கொளஞ்சியப்பர் கோயில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில் என ஆன்மீக உள்கட்டமைப்பு மேம்படும்.

Source link