வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் 'ஆர்டெமிஸ் – 2' திட்டத்தின் கீழ் ஓரியான் விண்கலத்தில்

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ‘ஆர்டெமிஸ் – 2’ திட்டத்தின் கீழ் ஓரியான் விண்கலத்தில் நிலவை சுற்றி வந்து சாதனை படைத்த விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக நேற்று காலை பூமிக்கு திரும்பினர்.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடைசியாக 1972ல், ‘அப்போலோ – 17’ விண்கலம் மூலம் நிலவை நோக்கி மனிதர்களை அனுப்பியது. அதன்பின் நிறைய விண்கலம் நிலவுக்கு சென்றாலும், மனிதர்களுடன் எந்த விண்கலமும் செல்லவில்லை.

இந்நிலையில், 53 ஆண்டுகளுக்கு பின், ‘ஆர்டெமிஸ் – 2’ திட்டத்தின் கீழ் ஓரியான் விண்கலம், விண்வெளி வீரர்களுடன், கடந்த 2ல் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து புறப்பட்டது. இதுவும் நிலவில் தரையிறங்காமல், நிலவை சுற்றி வரும் 10 நாள் திட்டமாகும். இது வெற்றிகரமாக நேற்று நிறைவுபெற்றது.

அமெரிக்காவைச் சேர்ந்த ரீட் வைஸ்மேன், கிறிஸ்டினா கோச், விக்டர் குளோவர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜெரமி ஹான்சன் ஆகிய நான்கு பேர் ‘ஆர்டெமிஸ் – 2’ திட்டத்தில் பயணித்தனர்.

ஓரியான் விண்கலம் 4 லட்சத்து 6,771 கி.மீ., கடந்து, இதுவரை விண்வெளி வீரர்கள் பயணிக்காத சாதனை தூரத்தை சில நாட்களுக்கு முன் அடைந்தது.

அப்போது பூமியில் இருந்து தெரியாத நிலவின் பின் பகுதியை நேரடியாகக் கண்டனர். ஆறு மணிநேரத்திற்கு மேல் நிலவை புகைப்படம் எடுத்தனர். அதில் நிலவின் பெரிய பள்ளங்கள், பழங்கால எரிமலை, நிறம், ஒளி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

பூமி நிலவுக்கு பின்னால் தோன்றுவது, மறைவது போன்ற அற்புத காட்சிகளை விண்வெளி வீரர்கள் பார்த்தனர். இதையடுத்து பூமியை நோக்கி ஓரியான் விண்கலம் திரும்பியது. நேற்று காலை 5:00 மணி அளவில் வளிமண்டலத்திற்குள் விண்கலம் நுழையும் போது தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டது.

இது நாசாவில் உள்ளவர்களுக்கு மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியது.

அந்தக் கட்டத்தை வெற்றிகரமாக கடந்து, தொடர்பு மீண்டும் ஏற்பட்டது. குழுவின் நிலைமை குறித்து உடனடியாக தகவல் வழங்கப்பட்டது. காலை 5:37 மணிக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான்டியாகோ அருகே கடலில் விண்கலம் தரையிறக்கப்பட்டது. நான்கு விண்வெளி வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

‘ஆர்டெமிஸ் 2’ திட்டத்தை நிர்வகித்த இந்திய வம்சாவளி நிலவுக்கான பயணத் திட்டத்தை முன்னெடுத்து வரும் அமெரிக்க விண்வெளி நிலையமான நாசாவில், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமித்  க் ஷத்ரியா முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். நாசாவின் 10 பல்வேறூ மையங்களின் இயக்குநர்களையும், பல்வேறு விண்வெளி திட்ட இயக்குநரகங்களையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பை வகித்து வருகிறார். ஆர்டெமிஸ் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது.

Source link