எரிசக்தி பயன்பாட்டில் புது கட்டுப்பாடு திருப்பூர் தொழில்துறையினர் எதிர்ப்பு

திருப்பூர்: உற்பத்தியான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை, 15 நிமிடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று மின்வாரியம் கட்டுப்பாடு விதிக்க, தொழில்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம், உற்பத்தியாகும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடுத்த, 15 நிமிடங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்ற புதிய நிபந்தனையை விதிக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது ஒரு நாள் முழுதும் உற்பத்தியாகும் மின்சாரத்தை அன்றைய தினத்திற்குள் பயன்படுத்தி கொள்ளும் நடைமுறை உள்ள நிலையில், இந்தத் திடீர் மாற்றம் தொழில்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தவறினால் பெரும் அபராதம் வசூலிக்கப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

திருப்பூர் போன்ற தொழில்துறை மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்திற்கு வரும் வேட்பாளர்களிடம், இந்த, 15 நிமிட கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்பதே முதன் மையான கோரிக்கையாக வைக்கப்படுகிறது.

ஏற்கனவே பலமுறை மின் கட்டண உயர்வு உள்ளிட்ட, 16 வகை கூடுதல் சுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் தொழில்துறையினர், இந்த விவகா ரத்தை வேட்பாளர்களிடம் மனுக்களாக அளித்து வருகின்றனர்.

Source link