சஞ்சு சாம்சன் அதிரடி சதம்: டெல்லியை வீழ்த்தி சிஎஸ்கே முதல் வெற்றி

சென்னை: ஐபிஎல் 2026 தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனின் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

சென்னை சேப்பாகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணிக்குத் தொடக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி ஆட்டத்தைத் தொடங்கியது. இதில் ருதுராஜ் 18 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும், மறுமுனையில் சஞ்சு சாம்சன்56 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 115 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

Source link