நாகைக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட்

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகை மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (அக்டோபர் 26) கனமழை (மஞ்சள்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* மயிலாடுதுறை,

* தஞ்சாவூர்,

* திருவாரூர்,

* புதுக்கோட்டை,

* ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை பொழிவு குறையும். நாளை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link