கேள்வி: மூலப்பொருள் விலை உயர்வு, தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்படும் சிறு ரப்பர் உற்பத்தியாளர்களுக்கு எத்தகைய நிதியுதவி தேவை?
பதில்: ரப்பர் விலை திடீரென உயரும்போது, சிறு நிறுவனங்களுக்கு மூலப்பொருட்களை வாங்க கூடுதல் பணம் தேவைப்படுகிறது. பெரிய நிறுவனங்களை போல அதிகளவில் மூலப்பொருட்களை வாங்கி இருப்பு வைக்கும் வசதி இல்லை. எனவே, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு எளிதாக நடைமுறை மூலதன கடன் கிடைக்க வேண்டும். உள்நாட்டில் ரப்பர் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில், இறக்குமதி வாயிலாக மூலப்பொருள் கிடைக்கவும் நடவடிக்கை தேவை. ரப்பர் விலை சீராக இருப்பதும், தேவையான நேரத்தில் மூலப்பொருள் கிடைப்பதும் சிறு நிறுவனங்களின் உற்பத்தியை தொடர உதவும்.
அனய் குப்தா
