நெதர்லாந்தில் ஒரு யூரோவிற்கு பெட்ரோல் – பங்க் மூடுவிழா விசித்திரம்

38 ஆண்டுகாலப்  பெட்ரோல் பங்க்கின் வித்தியாசமான பிரியாவிடை – நீண்ட வரிசைகள், போக்குவரத்து நெரிசல், மக்களின் உற்சாகம்!

நெதர்லாந்தின் கெல்டர்லாந்து மாகாணத்தில் உள்ள வூர்ஸ்ட் என்ற சிறிய கிராமத்தில், ஒரு பெட்ரோல் நிலையம் 38 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அது நிரந்தரமாக மூடப்படும் சூழ்நிலையில் தனது கடைசி நாளில் நடத்திய அதிரடி விலைச் சலுகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அங்கே அக்டோபர் 24, 2026 அன்று, மாலை 4 மணி முதல் 5 மணி வரை பெட்ரோலும் டீசலும் லிட்டருக்கு வெறும் ஒரு யூரோவுக்கு விற்பனை செய்யப்பட்டன.

வூர்ஸ்ட் கிராமத்தில் அமைந்திருந்த இந்த நிலையத்தை டி க்ரூன் குடும்பம் நடத்தி வந்தது. பல ஆண்டுகளாக உள்ளூர் மக்களுக்குச் சேவை செய்த இந்தத் தொழிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

காரணம், இப்போது அந்த பெட்ரோல் பங்க் செயல்பட்டு வரும் இடத்தை ஒரு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் வாங்கி, அங்கே வீடுகள் உள்ளிட்ட புதிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடைசி நாளில் காலை 8 மணி முதலே வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பு மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலான ஒரு மணி நேரச் சலுகைதான்.

அந்த நேரத்தில் பெட்ரோலும் டீசலும் லிட்டருக்கு €1 என்ற விலையில் விற்கப்பட்டன. அதற்கு முன்பு பெட்ரோல் லிட்டருக்கு சுமார் €2.139, டீசல் €2.269 என்ற விலையில் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link