திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது

சென்னை: முந்தைய திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மகேஷ். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வரை லஞ்சம் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மகேஷ், தனியார் பள்ளி சங்கத் தலைவர்பி.டி.அரசகுமார் மற்றும் மகேஷின் உதவியாளர் முத்துக்குமார் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதியப்பட்டது. மகேஷ் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு மகேஷ் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று மாலை மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, லஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுகவை சேர்ந்த முதல் மாஜி அமைச்சர் மகேஷ் ஆவார்.

மகேஷ், திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் நெருங்கிய நண்பரும், சர்க்காரியா கமிஷனில் குற்றம் சாட்டப்பட்டவருமான அன்பில் தர்மலிங்கத்தின் பேரன்.

Source link